Browsing: உதயமுகம் இதழ்

இறந்தவன் பேசுகிறேன் – உதயமுகம் இணைய இதழில் புதிய தொடர்

கனடா வாழ் இலங்கை தமிழ் எழுத்தாளர் ஆனந்தி மகேந்திரன் எழுதும் ஆர்தர் ஃபோர்ட் வாழ்க்கைக் கதை… இறந்தவர்களுடன் பேசும் மீடியமாக தம்மை கூறிக்கொண்ட ஆர்தர் ஃபோர்ட் இறந்த பின்னர், மறுமை வாழ்க்கை குறித்தும், உலக வாழ்க்கை குறித்தும் பேசுவதாக அமைந்த தொடர்…

உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்… uthayamugam 25th issue layout single

பள்ளிகளில் சினிமா காட்டுங்க… ஆசிரியர்களின் சிரமத்தையும் பாருங்க… – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

பள்ளிக்கல்வித் துறையிலிருந்து வெளியான உருப்படியான அறிவிப்பு பள்ளிகளில் மாணவர்களுக்கான சினிமா திரையிடுவதுதான். இளம் மனங்களில் திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அனுபவப்பட்டவன் என்ற வகையில் இந்தத் திட்டத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். எனது பள்ளி வாழ்க்கையில் ‘வா ராஜா வாÕ, ‘திக்குத்தெரியாத காட்டில்’, ‘மாணவன்’ போன்ற படங்கள் ஏற்படுத்திய பாதிப்பு இன்னமும் தொடர்கிறது. தமிழில் பெற்றோர்களுடன் குழந்தைகளும் அமர்ந்து பார்க்கும் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. இதற்கு காரணம் அத்தகைய படங்களுக்கு போதுமான ஊக்குவிப்பு இல்லை. பள்ளிகளில் குழந்தைகளுக்கான…

குரலற்றவர்களுக்கு உதவினால், குரல்வளையை நெறிக்கும் மோடி அரசு! – உதயமுகம் தலையங்கம்

மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் யாராக இருந்தாலும் அவர்களுடைய குரல்வளையை நெறிப்பது மத்திய பாஜக அரசின் வாடிக்கையாக இருக்கிறது. குஜராத்தில் இந்து மதவெறியர்களால் அடித்தும் எரித்தும் கொல்லப்பட்ட 69 பேருக்காக குரல் கொடுத்தவர் டீஸ்ட்டா செதால்வத். அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பின் செயல்பாட்டாளர். இந்தத் தாக்குதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எசான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைக்கு அன்றைய முதலமைச்சராக இிருந்த மோடியும் அதிகாரிகளும்தான் தூண்டுதலாக இருந்தார்கள் என்று ஜாஃப்ரியின் மனைவி…

உதயசூரியனின் உலக சாதனையும், சிக்கி சீரழியும் இரட்டை இலையும்..! – உதயமுகம் இதழ் கவர் ஸ்டோரி

அதிமுக என்னவோ நாகரிகத்தின் தொட்டில் போலவும், ஏதோ இந்தப் பொதுக்குழுவில்தான் அநாகரீகமான மோதல்கள் நிகழ்ந்தது போலவும் ஊடகங்கள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. அதிமுகவையே ஒரு அநாகரீகமான இயக்கமாகத்தான் எம்ஜியார் உருவாக்கினார். காங்கிர ஸுக்கும் திமுகவுக்கும் அரசியல் ரீதியாக மோதல்கள் இருக்கும். ஆனால், அன்றைக்கு காங்கிரஸ் முதல்வர்களுடனும், மற்ற அமைச்சர்களுடனும் நாகரீகமான அணுகுமுறையை கடைப்பிடித்தார் அண்ணா. ஆனால், திமுகவில் அப்பா இருந்தாலும், அப்பாவுடன் மகன் பேசுவதைக்கூட அனுமதிக் காதவர் எம்ஜியார். தனது கட்சித் தொண்டர்களும் அமைச்சர்களும் கட்சிச் சின்னத்தை…

அதிகாரிகளும் உளவுத்துறையும் எழுப்பிய சுவர் உடைபடுமா? – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

“இன்னும் எத்தனை பேரை இந்த சுவரு காவு வாங்கப் போகுதோ” மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சுவருக்கு முக்கியமான பங்கு இருக்கும். அந்தச் சுவருக்காக பெரிய அரசியல் சண்டையே நடக்கும். தமிழ்நாடு அரசியலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சுற்றி அதுமாதிரி ஒரு சுவரை எழுப்பி, கட்சியையே காவு வாங்குமளவுக்கு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது. முதலமைச்சர் மிகவும் நம்பிய அதிகாரிகளும், மாநிலத்தின் பல பகுதிகளிலும், கட்சிக்குள்ளும் நடக்கிற விஷயங்களை முதலமைச்சருக்கு உளவு சொல்லக்கூடிய அதிகாரிகளும் அந்த சுவரை எழுப்பியிருந்தார்கள். கட்சித் தொண்டர்கள்…

1 2 3 6