குரலற்றவர்களுக்கு உதவினால், குரல்வளையை நெறிக்கும் மோடி அரசு! – உதயமுகம் தலையங்கம்
மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் யாராக இருந்தாலும் அவர்களுடைய குரல்வளையை நெறிப்பது மத்திய பாஜக அரசின் வாடிக்கையாக இருக்கிறது. குஜராத்தில் இந்து மதவெறியர்களால் அடித்தும் எரித்தும் கொல்லப்பட்ட 69 பேருக்காக குரல் கொடுத்தவர் டீஸ்ட்டா செதால்வத். அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பின் செயல்பாட்டாளர். இந்தத் தாக்குதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எசான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைக்கு அன்றைய முதலமைச்சராக இிருந்த மோடியும் அதிகாரிகளும்தான் தூண்டுதலாக இருந்தார்கள் என்று ஜாஃப்ரியின் மனைவி…