உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 2.மைக்கேல் ஏஞ்சலோ
எல்லாக்காலத்திலும் போற்றப்படும் மகத்தான ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ. அவரது பெயர் ‘மகத்தான படைப்பு’ என்ற சொற்றொடருக்கு இணையானது. ஒரு ஓவியராக அவர் யாரோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த கலைஞனாக திகழ்ந்தார். அவர் தனது ஓவியங்களில் மனித வாழ்க்கையை விரிவாகவும் அழகாகவும் வெளிப்படுத்தினார். அவரது காலத்தில் வாழ்ந்த மற்ற ஓவியர்களை விட மைக்கேல் ஏஞ்சலோ மிகவும் மதிக்கப்பட்டார். மைக்கேல் ஏஞ்சலோ 1475, மார்ச் 6 ஆம் தேதி இத்தாலியின் மத்தியப்பகுதியான துஸ்கனியில் உள்ள கேப்ரஸேவில்…