எழக்கூட சக்தியின்றி தோற்றுக் கொண்டிருக்கிறான் உழவன் – Fazil Freeman Ali
தமிழ்நாட்டில் தற்போது கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் பொங்கல் திருவிழா இந்துப் பண்டிகையா, திராவிடர் பண்டிகையா, சைவர் பண்டிகையா என்றெல்லாம் காரசார விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இது ஒரு அக்மார்க் விவசாயிகளின் “அறுவடைத் திருவிழா”. விவசாயம் தெரியாத நாடோடி கூட்டங்கள் மட்டுமே இம்மாதிரி பண்டிகைகள் கொண்டாடுவதில்லை. உலகம் முழுவதும் எல்லா விவசாய சமூகத்தினராலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படும் “உழவர் திருநாள்” இது. நிலத்தை செப்பனிட்டு, உழுது நீர்பாய்ச்சி, பயிரிட்டு களை எடுத்து… பலமாத உழைப்பிற்குப்பின் அறுவடை செய்யும் விவசாய பெருமக்கள்…