Browsing: எம்.ஆர். ராதாவின் சிறை அனுபவங்கள்

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் 30 – விந்தன்

30. தருமம் தலை காக்கும் “இந்த நாட்டிலே மனுஷனா வாழறதை விட நாயா. வாழறது நல்லதுன்னு சிலர் நினைக்கிறாங்க; நாயா வாழறதைவிட மனுஷனா வாழறது நல்லதுன்னு சிலர் நினைக்கிறாங்க. நானோ ‘நாயா வாழறதை விட மனுஷனா வாழறதுதான் நல்லது’ங்கிற முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுக்கு நான் வர ஒரு காரணம் ரெண்டு காரணம் இல்லே, எத்தனையோ காரணங்கள் இருந்தன…” “அந்தக் காரணங்களை…? “இப்போ நான் சொல்றதும் ஒண்ணுதான்; சொல்லாம விடறதும் ஒண்ணுதான்…” “சரி, விடுங்கள்; அப்புறம்?” ‘அதுக்கு…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் 29 – விந்தன்

29. அண்ணாவின் ஆசை “சிவாஜிகணேசனும் நானும் சேர்ந்து நடிச்ச ‘பாகப்பிரிவினை’ படம் வந்தது. அதை மெஜஸ்டிக் ஸ்டூடியோவிலே போட்டு அண்ணாவுக்குக் காட்டினாங்க…” “எந்த மெஜஸ்டிக் ஸ்டூடியோ, இப்போதுள்ள சாரதா ஸ்டூடியோதானே?’’ “ஆமாம். அந்தப் படத்தைப் பார்த்த அண்ணா, ‘எம்.ஜி.ராமச்சந்திரனோடு நீங்க இப்படிச் சேர்ந்து நடிக்கணுங்கிறது என் ‘ஆசை’ன்னார். அதுக்கென்ன, நடிச்சாப் போச்சு’ன்னு நான் தேவரைப் பார்த்தேன்…” “ஏன், அவரால்தான் உங்கள் இருவரையும் சேர்த்து வைத்துப் படம் எடுக்க முடியும் என்றா?” “இல்லே, அண்ணாவின் ஆசையை அவரால்தான் சீக்கிரமா…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் 28 – விந்தன்

திமுகவும் நானும்! அறுபத்திரண்டு எலெக்சன்னு நினைக்கிறேன்; ஜெமினி வாசன் ஒரு நாள் என் தோட்டத்துக்கு டெலிபோன் செய்து, ‘ஒரு காரியமா உங்களைப் பார்க்கணும். நான் உங்க தோட்டத்துக்கு வரட்டுமா, நீங்க என் வீட்டுக்கு வர்றீங்களா?’ன்னார். நானே வரேன்’ன்னு போனேன். அப்போ காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் ஒரு படம் எடுத்துக்கிட்டிருந்தார். அதிலே நீங்களும் நடிக்கணும்னார். ‘நடிக்கிறேன்; என் கருத்தைச் சொல்ல இடம் கொடுப்பீங்களா?’ன்னு கேட்டேன். ‘காமராஜைக் கேட்டுச் சொல்லணும்‘னார். ‘கேளுங்க’ன்னேன். கேட்டார்; ‘அது முடியாது’ன்னு அவர் சொல்லிட்டார்.…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 27 – விந்தன்

27. இரு கெட்டிக்காரர்கள் கதை “நாடகம் சிலருக்குக் கலையாயிருக்கும்; சிலருக்குத் தொழிலாயிருக்கும். எனக்கோ அது கலையாகவும் தொழிலாகவும் மட்டுமில்லே, தொண்டாகவும் இருந்தது, தொண்டுன்னா நான் வேறே எந்தத் தொண்டையும் சொல்லல்லே; சமூகச் சீர்திருத்தத் தொண்டைத்தான் சொல்றேன்,,” “பெரியார் சீடராயிற்றே, வேறு என்ன தொண்டைப் பற்றிச் சொல்லப் போகிறீர்கள்?” “பெரியார் சீடனாயிருந்தாலும் அந்தத் தொண்டுக்கு முதலில் எனக்கு வழி காட்டியவர் பேரறிஞர் அண்ணாங்கிறதை நான் இன்னும் மறக்கல்லே, என்னிக்கும் மறக்க மாட்டேன்…” “அது எப்படி?” “அவர்தான் திருச்சி திராவிடக்…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 26 – விந்தன்

26. நெஞ்சிலே இட்ட நெருப்பு “ரத்தக் கண்ணீர் சினிமா வரை சொல்லிக்கொண்டு வந்துவிட்டீர்கள். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி விவகாரங்கள் பற்றி மட்டும் ‘சொல்கிறேன், சொல்கிறேன்’ என்று இன்னும் சொல்லவேயில்லையே?” என்று நான் மீண்டும் ஒரு முறை அதை ராதாவின் நினைவுக்குக் கொண்டு வந்தேன். அவர் கொஞ்சம் தயக்கத்தோடு சொன்னார்; “அந்த விவகாரங்களை நான் இந்த நாட்டுக்கும், நாகரிகத்தின் எல்லையையே தொட்டுவிட்டதாக எண்ணிக்கிட்டிருக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் சில சமயம் சொல்லணும்னும் நினைக்கிறேன்; சில சமயம் சொல்ல வேணாம்னும்…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 25 – விந்தன்

25. என் வழி தனி வழி “தூக்குமேடை நாடகம் தஞ்சாவூரோடு நிற்கல்லே, எல்லா நாடகங்களையும் போல அதுவும் பட்டி, தொட்டியெல்லாம் நடந்தது. அந்த நாடகத்துக்கு நாட்டிலே எவ்வளவு ஆதரவு இருந்ததோ, அவ்வளவு எதிர்ப்பும் இருந்தது..” “பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கையை முதன் முதலாக அம்பலப்படுத்திய நாடகம் அது என்று சொல்வார்களே, எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா?” “நான்தான் எதிர்ப்பிலேயே வளர்ந்தவனாச்சே, அதுக்கெல்லாம் அஞ்சுவேனா? ‘என் நாடகம் பாகற்காய் மாதிரி. கசப்பைப் பார்க்காம பாகற்காயைக் கறி சமைத்துத் தின்னா உடம்புக்கு…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 24 – விந்தன்

24. திருவாரூர் சிங்கராயர் “காந்தியார் அகிம்சாவாதியாயிருந்தாலும் அப்போ திருந்த காங்கிரஸ் தொண்டர்களிலே பலர் அகிம்சாவாதி களாயில்லே. திராவிடர் கழக மாநாடு எங்கே நடந்தாலும் அந்த மாநாட்டுப் பந்தல்களைக் கொளுத்தறதிலே அவங்க முன்னணியிலே நின்னாங்க; நின்னாங்க; கறுஞ் சட்டைக்காரனைப் பிடிச்சி அடிக்கிற ஆத்திரத்திலே தங்களை மறந்து கறுப்பு அங்கி போட்ட வக்கீலையும் பிடிச்சி அடிச்சிட்டு, ‘ஐ ஆம் வெரி சாரி’ன்னாங்க. என் நாடகம் எங்கே நடந்தாலும் அதை நடக்கவிடாம தடுக்கிறதுக்காகத் செல்வாக்கை தங்கள் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு…

1 2 3 4