எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் 28 – விந்தன்
திமுகவும் நானும்! அறுபத்திரண்டு எலெக்சன்னு நினைக்கிறேன்; ஜெமினி வாசன் ஒரு நாள் என் தோட்டத்துக்கு டெலிபோன் செய்து, ‘ஒரு காரியமா உங்களைப் பார்க்கணும். நான் உங்க தோட்டத்துக்கு வரட்டுமா, நீங்க என் வீட்டுக்கு வர்றீங்களா?’ன்னார். நானே வரேன்’ன்னு போனேன். அப்போ காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் ஒரு படம் எடுத்துக்கிட்டிருந்தார். அதிலே நீங்களும் நடிக்கணும்னார். ‘நடிக்கிறேன்; என் கருத்தைச் சொல்ல இடம் கொடுப்பீங்களா?’ன்னு கேட்டேன். ‘காமராஜைக் கேட்டுச் சொல்லணும்‘னார். ‘கேளுங்க’ன்னேன். கேட்டார்; ‘அது முடியாது’ன்னு அவர் சொல்லிட்டார்.…