எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 6 – விந்தன்
6. கோவிந்தா, கோவிந்தா! “ஒரு தீபாவளிக்கு நானே வெடி தயார் சேஞ்சேன்…” “என்ன வெடி, யானை வெடியா?” “இல்லை, அதுக்கும் அப்பன் வெடி!” “நரகாசுரன் ‘நம்ம ஆசாமி’ என்று சொல்வார பெரியார், நீங்கள் தீபாவளி கொண்டாடுவீர்களா, என்ன?” “வெடி நரகாசுரனுக்காக இல்லே, திருப்பதி கோவிந்தராஜனுக்காக!” “அட பாவமே!…அவன் என்ன செய்தான் உங்களை?” “அவன் ஒண்ணும் செய்யலே, அவனுடைய தேவஸ்தான நிர்வாகிங்க நாள் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாங்க!” “காரணம்?” “அது எனக்குத் தெரியாது. அன்னிக்கு என் கையிலே ஒரு…