எளிய மருத்துவக் குறிப்புகள் – 50. இஞ்சி சாறு…
1. குழந்தைக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டால்… ஒரு டீஸ்பூன் கிரைப்வாட்டரில் இஞ்சி சாறு ஐந்து துளி, இந்தக் கலவையோடு சம அளவு தேன் கலந்து கொடுத்தால் கோளாறு சரியாகும். 2. குழந்தைக்கு சளி தொந்தரவு ஏற்பட்டால்… ஆடாதொடா இலை மூன்று எடுத்து அதை ஆவியில் வேகவைத்து, பின்பு சுத்தமான வெள்ளைத்துணியில் அதைக் கட்டி சாறு பிழியவும். இந்த சாறில் ஐந்து துளியை ஐந்து துளி தேனில் கலந்து கொடுத்தால் பிரச்னை தீரும். 3. குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்தால்…