நன்றி கெட்ட தம்பி – கல்கியின் சிறுகதைகள் – 4
கோவிந்தசாமி நாயக்கர் செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவர். அவர் பிறந்தபோது அவர் தந்தை இராமானுஜலு நாயக்கருக்கு ஐந்து வேலி நன்செய் நிலமும் மற்றும் தோப்புத் துறவுகளும் இருந்தன. ஆனால் அவருக்கு வயது பத்து ஆனபோது, குடும்பத்திற்குப் பொல்லாத காலம் ஏற்பட்டது. அவருடைய தம்பி தீனதயாளு பிறந்த லக்னமே அதற்குக் காரணமென சோதிடர்கள் கூறினர். ஆனால் இந்தக் கொள்கையில் நமக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஏனெனில், தீனதயாளு பிறந்த லக்னத்திற்கும், இராமானுஜலு நாயக்கர் அவ்வூர் ஜமீன்தாருடன் ஒரு தாசி…