Browsing: கல்கியின் சிறுகதைகள்

கதை இலக்கியம் – 5 – பிஞ்சுகளும் போரிடும் – மேலாண்மை பொன்னுச்சாமி

வழக்கம்போல் அந்த நேரத்தில் தான் பரிமளம் பாட்டி விழித்துக்கொண்டாள். பக்கத்தில் ராஜி படுத்திருந்தான். வீடு பூராவும் ஈரமாகி சுவரெல்லாம்-தரையெல்லாம் குளிர்ந்து கிடந்ததால், கிழிந்த சாக்குகள் இரண்டை கீழே போட்டு, அதன் மேல் கால்களையும் கைகளையும் உள்ளுக்குள் மடக்கிக் கொண்டு சுருண்டு ஒடுங்கிப் படுத்திருந்தாள். வாயில் கோழை வடிய, குழந்தைபோல் அமைதியாக உறங்கும் இவள்தான்-இந்தச் சிறுமிதான். தன்னைக் காப்பாற்றுகிறாள் என்பதை நினைத்து, ஒரு சோகப் பெருமூச்சுடன் எழுந்து நெட்டி முறித்துக் கொண்டாள் பாட்டி. ரொம்பத் தொலை தூரத்தில் ஊதப்படும்…

கதை இலக்கியம் – 4 – உண்மைக்கதை – கு.ப. இராஜகோபாலன்

புரட்சிக்காரர்கள் ரயில் தண்டவாளங்களைப் பிடுங்கிவிடுவார்கள் என்ற பயத்தாலோ, என்னவோ அனறு எக்ஸ்பிரஸில் கூட்டமே இல்லை என் நண்பனும் நானும் ஏறிய வண்டியில் இருவர்தான் இருந்தார்கள். வயது சென்ற ஒருவர் பலகையில் ஒரு ஓரமாக ஜன்னலில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். சுமார் இருபது வயதுள்ள பெண் பலகையின் பாக்கி இடத்தில் படுக்கயை விரித்துக்கொண்டு படுத்திருந்தாள். வண்டி புறப்படும் வரையில் அவர் ஒன்றுமே பேசவில்லை நாங்களும் ரயிலுக்கு வந்த நண்பர்களுடன் பேசுவதில் ஈடுபட்டிருந்தோம். வண்டி நகர்ந்ததும், நாங்கள் இடத்தில் வந்து…

கதை இலக்கியம்-3 – கடிதமும் கண்ணீரும் – கல்கி

பிரசித்தி பெற்ற தேவி வித்யாலயத்தின் ஸ்தாபகரும் தலைவியுமான சகோதரி அன்னபூரணி தேவி ஒருநாள் மாலை வழக்கம்போல் வித்யாலயத்தைச் சுற்றியிருந்த பெரிய தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார். வித்யாலயத்துக்குச் கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு பங்களாவிலிருந்து வந்த நாதஸ்வரத்தின் கீதம் அவருக்கு ஏதேதோ பழைய நினைவுகளை உண்டாக்கியது. எப்போதும் சாந்தம் குடிகொண்டிருக்கும் அவருடைய முகத்திலே ஒரு நிமிஷம் கிளர்ச்சியின் அறிகுறி தோன்றி அடுத்த கணம் மறைந்தது. அக்காட்சி, அமைதியான சமுத்திரத்தில் திடீரென்று ஒரு பேரலை கிளம்பிக் கரையோரமிருந்த பாறைமீது மோதி அதை ஒரு…

வாழ்வும் தாழ்வும் – கல்கியின் சிறுகதைகள் – 10

தோழர் ஸ்ரீயுத ராஜராஜ சோழனையும் அவருடைய தர்மபத்தினி லோக மகாதேவியையும் இன்று நேயர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன். “கொஞ்சம் பொறுங்கள்; இந்தப் புள்ளிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?” தெரிந்திருக்கலாம், ஆனால்……“தெரிந்திருந்தால், இவர்கள் தங்களை வோட்டர்களாகப் பதிவு செய்துகொள்ளும்படி விண்ணப்பம் அனுப்பி விட்டார்களா?” இல்லை; அது சாத்தியமில்லை… “ஏன் சாத்தியமில்லை? அவர்களுக்கு ஏதாவது சொத்து சுதந்திரம் உண்டோ?” உண்டு என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யம்… “சரி சரி; அப்படியானால் அவர்கள் பெயர் வோட்டர் ஜாபிதாவில்…

பிச்சுவையர் பவுன் வாங்கியது – கல்கியின் சிறுகதைகள்- 6

பாபவிநாசம், பிராணதார்த்திஹர அய்யர் குமாரர், பிச்சுவையரின் அகடவிகட சாமர்த்தியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவருடைய சாமர்த்தியங்கள் அவருக்கே நன்றாய்த் தெரிந்தவை. தம்மை ஏமாற்றக் கூடியவன் இந்த ஜம்புத்வீபத்தில் ஒருவரும் கிடையாது என்று சொல்லிக் கொள்வார். அவருடைய கிராமாத்தாருக்கும் அவ ருடைய வல்லமைகளில் பூரண நம்பிக்கையுண்டு. “பா.பி. பிச்சுவை யரா? அவர் ஏமாந்தால் எமன் ஏமாந்த மாதிரி!’ என்று அவர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் பிச்சுவையரின் சாமார்த்தியங்களில் நம்பிக்கையில்லாத ஒரே ஒரு ஆத்மா உண்டு. அது அவருடைய தர்ம…

சர்மாவின் புனர் விவாகம் – கல்கியின் சிறுகதைகள் – 5

அட்வகேட் கோபாலசாமியைச் சந்திப்பது என்றால் எனக்குப் எப்போதும் சந்தோஷம்தான். அவர் வரும்போதெல்லாம் வெறுங்கையுடன் வரமாட்டார். ஏதாவது ஒரு பெரிய சர்வதேசப் பிரச்சினையைத் தீர்த்து எடுத்துக் கொண்டுதான் வருவார். அவர் வெறும் அட்வகேட் மட்டுமல்ல; மந்தைவெளி பார்லிமெண்டு சபையில் ஒரு பிரபல அங்கத் தினர். மலையில் விளைந்ததானாலும் உரலில் மசிந்துதான் ஆக வேண்டும் மென்பது போல எவ்வளவு பெரிய மகத்தான சர்வதேசப் பிரச்சினையாயிருந்தபோதிலும் சரி, அது மந்தைவெளி ‘ஓர்ல்ட்’ பார்லிமெண்டில் வந்து அடிபட்டுத்தான் ஆக வேண்டும்! அப்படி அடிபட்டுத்…

அபலைகள் – கல்கியின் கதைகள் – 2

புருஷ சிம்மங்களாகிய நாம் பெண் மயில்களை “அபலைகள்” என்று சொல்கிறோம். ஸ்தீரிகள் தனித் தனியாக இருக்கும்போது அவர்கள் ஒருவேளை உண்மையாகவே அபலைகளாயிருக்கலாம். ஆனால் அவர்களில் இரண்டு பேர் மட்டும் சேர்ந்துவிட்டால் எவ்வளவு பெரிய பெரிய காரியங்களுக்கெல்லாம் காரணபூதமாகிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது அவர்களை “அபலைகள்” என்று அழைப்பது சரியா என்றே சந்தேகம் உண்டாகிறது. அப்படிப்பட்ட அபலைகளில் இரண்டு பேரின் கதையை இங்கே எழுத உத்தேசித்திருக்கிறேன். அவர்களில் ஒருத்தியின் பேர் லலிதாங்கி; மற்றொருத்தியின் பெயர் கோமளாங்கி. இவ்விரு பெண் கொடிகளும்…