Browsing: கல்கி ஆர். கிருஷ்ணமூர்த்தி

மகேந்திர ஜாலபுரம் – கல்கியின் சிறுகதைகள் – 9

மந்திரசித்தி பெற்ற மகான் ஒருவர் உங்கள் முன் வருகிறார். தமது மந்திரக்கோலை எடுத்து இரண்டு முறை சுழற்றுகிறார். உடனே நீங்கள் கால வெள்ளத்திலே பின்நோக்கி யாத்திரை செய்யத் தொடங்குகிறீர்கள், பின்னால், பின்னால், பின்னால் விரைந்து செல்கிறீர்கள். நூறு வருஷம், இருநூறு வருஷம், ஐந்நூறு வருஷம், ஆயிரம் வருஷங்கள் சென்றன. இன்னும் உங்கள் யாத்திரை நிற்கவில்லை. இருபதாம் நூற்றாண்டு, 1934 ஆம் வருஷம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், காங்கிரஸ் போராட்டம், சட்டசபைத் திட்டம், ஜில்லா போர்டுகள், முனிஸிபாலிடிகள், போலீஸ் ஸ்டேஷன்கள்,…

கல் சொன்ன கதை – கல்கியின் சிறுகதைகள் – 8

கல்லுக்கு உயிர் உண்டா? “உண்டு” என்றான் அண்ணன்.  “இல்லை” என்றான் தம்பி. அண்ணன் வெறும் கல் தச்சன். ஆனால் தம்பியோ பெரிய கல்விமான். “நான் படித்திருக்கிற பதினாயிரத்துச் சொச்சம் நூல்களில் எதிலும் கல்லுக்கு உயிர் உண்டு என்று சொல்லவில்லை” என்று தம்பி தடாலடியடித்தான். அண்ணன் அவனுடன் வாதம் இடவில்லை. தான் கல் வேலை செய்யும் கொட்டகைக்குப் போய்விட்டான். வழக்கம்போல் அங்கிருந்து ‘டிங் டிங்’ ‘டக் டக்’ சத்தம் வந்து கொண்டிருந்தது. சில மாதங்களுக்குப் பின்னர் மேற்படி விவாதத்தைத்…

பிச்சுவையர் பவுன் வாங்கியது – கல்கியின் சிறுகதைகள்- 6

பாபவிநாசம், பிராணதார்த்திஹர அய்யர் குமாரர், பிச்சுவையரின் அகடவிகட சாமர்த்தியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவருடைய சாமர்த்தியங்கள் அவருக்கே நன்றாய்த் தெரிந்தவை. தம்மை ஏமாற்றக் கூடியவன் இந்த ஜம்புத்வீபத்தில் ஒருவரும் கிடையாது என்று சொல்லிக் கொள்வார். அவருடைய கிராமாத்தாருக்கும் அவ ருடைய வல்லமைகளில் பூரண நம்பிக்கையுண்டு. “பா.பி. பிச்சுவை யரா? அவர் ஏமாந்தால் எமன் ஏமாந்த மாதிரி!’ என்று அவர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் பிச்சுவையரின் சாமார்த்தியங்களில் நம்பிக்கையில்லாத ஒரே ஒரு ஆத்மா உண்டு. அது அவருடைய தர்ம…

நன்றி கெட்ட தம்பி – கல்கியின் சிறுகதைகள் – 4

கோவிந்தசாமி நாயக்கர் செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவர். அவர் பிறந்தபோது அவர் தந்தை இராமானுஜலு நாயக்கருக்கு ஐந்து வேலி நன்செய் நிலமும் மற்றும் தோப்புத் துறவுகளும் இருந்தன. ஆனால் அவருக்கு வயது பத்து ஆனபோது, குடும்பத்திற்குப் பொல்லாத காலம் ஏற்பட்டது. அவருடைய தம்பி தீனதயாளு பிறந்த லக்னமே அதற்குக் காரணமென சோதிடர்கள் கூறினர். ஆனால் இந்தக் கொள்கையில் நமக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஏனெனில், தீனதயாளு பிறந்த லக்னத்திற்கும், இராமானுஜலு நாயக்கர் அவ்வூர் ஜமீன்தாருடன் ஒரு தாசி…

அபலைகள் – கல்கியின் கதைகள் – 2

புருஷ சிம்மங்களாகிய நாம் பெண் மயில்களை “அபலைகள்” என்று சொல்கிறோம். ஸ்தீரிகள் தனித் தனியாக இருக்கும்போது அவர்கள் ஒருவேளை உண்மையாகவே அபலைகளாயிருக்கலாம். ஆனால் அவர்களில் இரண்டு பேர் மட்டும் சேர்ந்துவிட்டால் எவ்வளவு பெரிய பெரிய காரியங்களுக்கெல்லாம் காரணபூதமாகிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது அவர்களை “அபலைகள்” என்று அழைப்பது சரியா என்றே சந்தேகம் உண்டாகிறது. அப்படிப்பட்ட அபலைகளில் இரண்டு பேரின் கதையை இங்கே எழுத உத்தேசித்திருக்கிறேன். அவர்களில் ஒருத்தியின் பேர் லலிதாங்கி; மற்றொருத்தியின் பெயர் கோமளாங்கி. இவ்விரு பெண் கொடிகளும்…