Browsing: கிள்ளை ரவீந்திரன்

கருணாநிதி எனும் கலைஞர்! – கிள்ளை ரவீந்திரன்

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள, திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். அழகிரிசாமி காரணம் கலைஞர், தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூண் என்று வர்ணிக்கப்பட்ட, பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கலைஞர், தனது 13வது வயதில் அரசியலில் அடியெடுத்துவைத்தார். இதைத்தான் கட்சி தொண்டர்கள் சிலர் அழகிரியால்தான்…

கிள்ளையில் குரங்குத் தொல்லைக்கு முடிவு!

கிள்ளை பேரூராட்சியில் பல ஆண்டுகளாக குரங்குகள் அட்டகாசத்திற்கு அளவே இல்லை, வீடுகளில் கதவு திறந்து இருந்தால் உணவு பொருட்களை காலி செய்துவிடும், மாமரம், தென்னை, வாழைமரங்களில் ஒரு குருத்தை கூட விட்டு வைப்பது இல்லை.. எங்கள் வீட்டிலும் இப்படி குரங்குகள் பழங்கள் உணவுகளை காலி செய்யும். பொறுத்து கொண்டோம். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது வராண்டாவில் இருந்த தலைவர்கள் படத்தை குரங்குகள் கீழே தள்ளி உடைத்து வைத்திருந்தன. இனியும் பொறுக்க முடியாது என்று நினைத்து…

கிள்ளை பேரூராட்சியில் முகத்துவாரப் பணி

ரூ38 கோடியில் கிள்ளை பேரூராட்சி முடசல் ஓடை முகத்துவாரப்பணி நடைபெறுவதை, கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் கிள்ளை பேரூராட்சியின் குடிநீர் தேவைகள், முடசல்ஓடை, பில்லு மேடு, பொன்னந்திட்டு 40 வீடு, பட்டா தேவைகள், முழுக்குத் துறைமயான பிரச்சனை, கிள்ளை கடைவீதியில் குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி வீடு தேவைகள், MGR நகர், தளபதி நகர், சிசில் நகர், இருளர் மக்கள் தொழிலுக்கு செல்லும் சாலை வசதி, தனி ரேஷன் கடை உள்ளிட்ட தேவைகளை…

கிள்ளையில் பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தும் பணி

கிள்ளை பேரூராட்சியில் திமுக சார்பில் தலைவராக மல்லிகாவும் துணைத்தலைவராக வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரனும் பொறுப்பேற்றபிறகு பேரூராட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் அக்கறை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் பள்ளி வளாகங்களில் கொசு மருந்து தெளித்து, கொசுக்களின் புகலிடமான புதர்களை ஜேசிபி மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இப்போது அந்த பள்ளி வளாகம் விளையாட்டு மைதானம் போல சமப்படுத்தப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் கிள்ளையில் இலவச சிலம்பப் பயிற்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிள்ளை பேரூர் திமுகவின் சார்பில் 100 மாணவர்களுக்கு இலவச சிலம்பம் பயிற்சி துவக்கவிழா கிள்ளை பேரூராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கிள்ளை பேரூராட்சியில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

கிள்ளை பேரூராட்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிள்ளை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

இருளர் பழங்குடி மூத்த தொண்டரின் கட்சி அனுபவம்!

கிள்ளை பேரூராட்சியின் துணைத்தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் இருளர் வகுப்பைச் சேர்ந்த முதிய கட்சிக்காரரின் அனுபவங்களை கேட்டறிந்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாக இருளர் வாழ்வியலை பகிர்ந்து தன்னுடன் பகிர்ந்த அவருடைய கட்சி அனுபவங்களை மீண்டும் நினைவுபடுத்தக் கேட்டார். அந்த வீடியோ பதிவை பார்க்கலாம்… இந்த வீடியோவில் 25 ஆண்டுகள் திமுகவில் இருளர் பழங்குடிகளின் பங்களிப்பை அவர் நினைவுபடுத்துகிறார்.. வி.பி.சிங் திமுக தலைமையகமான அறிவாலயத்தை திறந்தது முதல் சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் நடத்திய மாநாடு வரை பேசுகிறார். ஆயிரம்…