Browsing: குளித்தலையில் கலைஞர் போட்டி

கலைஞருக்கு எதிராக 1961ல் நடந்த முதல் சதி! – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

திமுகவைத் தொடங்கிய அண்ணா தலைமையிலான ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில் இல்லாத கலைஞர் திமுகவை சதி செய்து கைப்பற்றி விட்டார் என்று ஒரு குரூப் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது. ஆனால், நெடுஞ்செழியனைக் காட்டிலும் மற்ற யாரைக் காட்டிலும் அண்ணாவிடமும், கட்சி தொண்டர்களிடமும் நெருக்கமாக இருந்தவர் கலைஞர்தான் என்பதே உண்மை. அண்ணாவின் கட்டளைகளை தனது வியூகத்தால் மிகப்பெரிய அளவில் ரீச் செய்ய வைத்தவர் கலைஞர். கலைஞரின் இந்த புதுமையான அணுகுமுறையும் அது கலைஞருக்குப் பெற்றுத்தரும் புகழும் கட்சியில் சம்பத்…

தமிழ்நாட்டின் எல்லைச் சாமிகள் – ஆதனூர் சோழன்

இருள் கவியத் தொடங்கிய நேரம். அந்தக் கிராமத்தின் எல்லைக்குள் ஒருவன் மூட்டை முடிச்சுகளுடன் நுழைந்தான். அவனை ஒரு உருவம் வழிமறித்தது.. “யார் நீங்க? எந்த ஊர்? இங்கே எதுக்காக வர்றீங்க?” என்றது. “ஐயா, நான் பக்கத்து ஊருதானுங்க. அங்க இருக்கிற மனுஷங்க எல்லோரும் கெட்டவங்களா இருக்காங்க. வாழப் பொறுக்காதவங்களா இருக்காங்க” என்றான் அவன். அவனை அப்படியே திருப்பி அனுப்பியது அந்த உருவம். அடுத்தநாள், இதேபோல இன்னொருவன் அந்தக் கிராமத்து எல்லைக்குள் நுழைந்தான். அவனையும் அந்த உருவம் வழிமறித்தது……

நில உரிமைப் போராட்டத்தில் கலைஞருக்கு துணை நின்றவர்!

முன்னாள் முதல்வர் கலைஞர் , முதன்முதலில் குளித்தலை தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற காரணமாக இருந்தவர் கவுண்டம்பட்டி முத்து (96). இவர் தனது வயதுமூப்பு காரணமாக மரணம் அடைந்தார். “கலைஞரின் நட்பை மட்டும்தான் கடைசிவரை விரும்பினார். பதவிக்கு ஆசைப்படவில்லை!” என்று அவர் குறித்த நினைவுகளை அவருடைய உறவினர்கள் உருக்கமாக தெரிவித்தார்கள். 1957-ல் குளித்தலை தொகுதியில் கலைஞர் தன் முதல் தேர்தலைச் சந்திக்கவும், அங்கே அவர் 8 ஆயிரத்து 296 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவும் இந்த கவுண்டம்பட்டி முத்துதான்…