வாழ்வின் வண்ணங்கள் 49 – கை.அறிவழகன்
நான் அப்போது மிகச்சிறியனாக இருந்தேன். மருத்துவர்கள் எப்போதும் அழுவதில்லை என்று நெடுங்காலம் திடமாக நம்பினேன். ஏனெனில் மருத்துவர்கள் அழுவதை நான் அந்த நாட்களில் பார்த்ததில்லை. நான் பார்த்த மருத்துவர்கள் எல்லோரும் பெரும்பாலும் புன்னகைத்தார்கள். அவர்கள் மனிதக் கணக்கில் வரமாட்டார்கள் என்றும், உடலைக் கடந்து தொலைவில் மலைச்சாரலில் காற்றைக் கிழித்தபடி பறக்கும் ஒரு பறவையைப் போலவோ தொலைவில் கண்சிமிட்டும் விண்மீன்களைப் போலவோ அவர்கள் இருப்பார்கள் என்றும் நான் நம்பினேன். அது ஒரு இலையுதிர் காலத்தின் நீண்ட பகல் பொழுது,…