Browsing: கை.அறிவழன்

வாழ்வின் வண்ணங்கள் – 10 – கை.அறிவழகன்

வழக்கமாகக் கடந்து போகிற பாதைதான், அடர்ந்த காடுகளை இன்னும் பார்க்க முடிகிற சாலை, அன்றும் அப்படித்தான் கடந்து போனேன். பதின் வயதில் ஆண்டுக்கு ஒருமுறை‌யாவது ஒரு புரளியைக் கிளப்புவார்கள், “சங்கரபதிக் கோட்டையில் வடநாட்டுக் கொள்ளைக்காரர்கள் வந்து தங்கி இருக்கிறார்களாம்”. இந்தப் புரளியை‌ முன்வைத்து சங்கரபதிக் கோட்டை எனக்குள்ளும் தனது 51 ஆவது தூணை ஊன்றி வளரத் துவங்கியது. கொள்ளைக்காரர்களைப் பற்றிய கதைகள் மெல்ல வளரத் துவங்கும். கொள்ளைக்காரர்கள் தங்கள் மனைவியரையும் அழைத்து வந்திருப்பதாகவும், அவர்கள் வளையல் விற்பவர்களைப்…