கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்ல தடை
புரெவி புயல் காரணமாக, பாதுகாப்பு கருதி இரவு 7 மணி முதல் கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புரெவி புயலால் தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் மீனவர்களுக்கும் பாதுகாப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், புரெவி புயலால் கொடைக்கானல் பகுதியில், சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகின்றது.…