Browsing: கொரியா தமிழ் ஒற்றுமை

டாக்டர் அல்போன்ஸ் மாணிக்கத்துக்கு மாணவர்கள் வாழ்த்து

சென்னை லயோலா கல்லூரியைச் சேர்ந்த அருட்தந்தை முனைவர் அல்போன்ஸ் மாணிக்கம் அவர்கள் துறவறம் ஏற்று 50ஆவது பொன்விழா ஆண்டு சனிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து அவரால் கல்வி பெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அருட்தந்தை அல்போன்ஸ் மாணிக்கம் கடலூர் மாவட்டம் சிலுவைப் பாளையம் என்ற கிராமத்தில் 1953 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் மாணிக்கம் பிச்சம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது கடைசிக் குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் இரண்டு மூத்த சகோதரிகளும்…

சாதிப்பெயரை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமா? – முனைவர் ஆரோக்கியராஜ், தென்கொரியா

தமிழ்நாட்டில் இனி பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதிப்பெயர் குறிப்பிடப்படாது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இது இப்போதுதான் தோன்றிய சிந்தனை என்பதுஅல்ல. இந்தியாவில் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருந்த தலைவர் கலைஞர் 1973 ஜூலை 2 ஆம் தேதி பிறப்பித்த அரசு ஆணைதான் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆம், அன்றைக்கே, பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளின் சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட பெற்றோர் விரும்பாவிட்டால் கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் கலைஞர். ஆனால், படிப்படியாக சாதிகளின் தாக்கம் குறைந்து வந்த…

கொரியா வாழ் தமிழனின் பார்வையில் புரட்சிக் கவிஞரின் எழுச்சி வரிகள் – சகாய டர்சியூஸ் பீ

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினமான இன்று அவரின் கவிதைகளில் எனக்கு பிடித்த, இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கும் சில வரிகள் “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும், சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்”. – என்று தமிழுக்கும் அமுதென்று பேர் நூலில் இடம்பெற்ற பாடலில் தமிழனாய் நிற்பவர் இனப்பெயர் ஏன்”என்று பிறன்எனைக் கேட்டால் மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம். “நான்தான் திராவிடன்” என்று…

எதுதான் நிஜ தமிழ் புத்தாண்டு? சர்ச்சைக்கு எப்போது முடிவு? – சகாய டர்சியஸ் பீ

தமிழ் புத்தாண்டு எது என்ற விவாதம் இப்போ எல்லாம் ஒவ்வொரு தை மற்றும் சித்திரை முதல் நாள்களில் தவறாமல் நடைபெற்று வருகிறது. அதை பற்றிய சில வரிகள், முதலில் சித்திரை 01 தமிழ் புத்தாண்டா என்பதை பார்ப்போம்… தமிழ்ப் புத்தாண்டு இன்றுதான் எற்று ஒரு குறிப்பிட்ட நாளை குறித்த எந்த ஒரு குறிப்பும் நமது பண்டைய இலக்கியங்களில் இல்லை பின்னாளில் புகுத்தப்பட்ட ஒரு வழக்கமே அது. அது போலவே சமஸ்கிருத ஹேவிளம்பி வருடம் என்பதும் மதம் மற்றும்…

கொரியா தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஒற்றுமையில் புதிய மைல்கல் -Korea Tamil Similarity – கொரியா தமிழ் ஒற்றுமை – Dr. Arokiyaraj,

கொரியா தமிழ் உறவு குறித்து பல தகவல்கள் வெளியானபோதும், கொரியா மொழிக்கும் தமிழ்மொழிக்கும் இடையிலான உறவுகள் குறித்து வெளியான அளவுக்கு, கொரியா தமிழ் பண்பாடு, பழக்க வழக்கங்கள், உணவுமுறைகள், வழிபாட்டு ஒற்றுமைகள் குறித்த விழிப்புணர்வு சமீபத்தில்தான் அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஆரோக்கியராஜ் இதற்கான பெருமையைப் பெறுகிறார். கொரியா மொழியில் இடம்பெற்றுள்ள தமிழ் வார்த்தைகளின் ஒற்றுமை, விளையாட்டு ஒற்றுமைகள், உணவு ஒற்றுமைகள் குறித்து கொரியாவைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இணைந்து ஒரு வீடியோ…