Browsing: கொரியா தமிழ் சங்கம்

கொரியா தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

கொரியா தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திருவள்ளுவர் ஆண்டு 2054, (20 பிப்ரவரி 2023), வெள்ளிக்கிழமை. அறிவியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களால் உருவாக்கப்பட்ட கொரிய தமிழ்ச் சங்கம், ஆராய்ச்சிநோக்கில் தமிழ்ப்பணி, பொதுவான மக்கள் பணி, அறிவியல், சமுகம், அரசியல் தலைமைகளுடனான உரையாடல், மற்றும் கோவிட் பெருந்தொற்றுக்கால உதவிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தமிழ்கூறும் நல்லுலகின் நன்மதிப்பை பெற்றிருக்கும் அமைப்பாகும். கொரிய தமிழ்ச் சங்கம், கொரிய வெளியுறவுத்துறை சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட…

டாக்டர் அல்போன்ஸ் மாணிக்கத்துக்கு மாணவர்கள் வாழ்த்து

சென்னை லயோலா கல்லூரியைச் சேர்ந்த அருட்தந்தை முனைவர் அல்போன்ஸ் மாணிக்கம் அவர்கள் துறவறம் ஏற்று 50ஆவது பொன்விழா ஆண்டு சனிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து அவரால் கல்வி பெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அருட்தந்தை அல்போன்ஸ் மாணிக்கம் கடலூர் மாவட்டம் சிலுவைப் பாளையம் என்ற கிராமத்தில் 1953 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் மாணிக்கம் பிச்சம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது கடைசிக் குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் இரண்டு மூத்த சகோதரிகளும்…

சாதிப்பெயரை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமா? – முனைவர் ஆரோக்கியராஜ், தென்கொரியா

தமிழ்நாட்டில் இனி பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதிப்பெயர் குறிப்பிடப்படாது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இது இப்போதுதான் தோன்றிய சிந்தனை என்பதுஅல்ல. இந்தியாவில் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருந்த தலைவர் கலைஞர் 1973 ஜூலை 2 ஆம் தேதி பிறப்பித்த அரசு ஆணைதான் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆம், அன்றைக்கே, பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளின் சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட பெற்றோர் விரும்பாவிட்டால் கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் கலைஞர். ஆனால், படிப்படியாக சாதிகளின் தாக்கம் குறைந்து வந்த…

கொரியா வாழ் தமிழனின் பார்வையில் புரட்சிக் கவிஞரின் எழுச்சி வரிகள் – சகாய டர்சியூஸ் பீ

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினமான இன்று அவரின் கவிதைகளில் எனக்கு பிடித்த, இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கும் சில வரிகள் “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும், சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்”. – என்று தமிழுக்கும் அமுதென்று பேர் நூலில் இடம்பெற்ற பாடலில் தமிழனாய் நிற்பவர் இனப்பெயர் ஏன்”என்று பிறன்எனைக் கேட்டால் மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம். “நான்தான் திராவிடன்” என்று…

எதுதான் நிஜ தமிழ் புத்தாண்டு? சர்ச்சைக்கு எப்போது முடிவு? – சகாய டர்சியஸ் பீ

தமிழ் புத்தாண்டு எது என்ற விவாதம் இப்போ எல்லாம் ஒவ்வொரு தை மற்றும் சித்திரை முதல் நாள்களில் தவறாமல் நடைபெற்று வருகிறது. அதை பற்றிய சில வரிகள், முதலில் சித்திரை 01 தமிழ் புத்தாண்டா என்பதை பார்ப்போம்… தமிழ்ப் புத்தாண்டு இன்றுதான் எற்று ஒரு குறிப்பிட்ட நாளை குறித்த எந்த ஒரு குறிப்பும் நமது பண்டைய இலக்கியங்களில் இல்லை பின்னாளில் புகுத்தப்பட்ட ஒரு வழக்கமே அது. அது போலவே சமஸ்கிருத ஹேவிளம்பி வருடம் என்பதும் மதம் மற்றும்…

முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு தென்கொரியா சத்துணவு! – முனைவர் ஆரோக்கியராஜ்

இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது வசதியானவர் வீட்டு சாப்பாட்டுத் தட்டுகள் அல்ல. பள்ளிகளில் போடப்படும் சத்துணவுத் தட்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? தென்கொரியாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாப்பாடு இது. தினமும் வெவ்வேறு வெரைட்டியில் சாப்பாடு. வீட்டில் தயாரிக்கும் சாப்பாடைக் காட்டிலும் டேஸ்ட்டாக, விதவிதமான கூட்டுப் பொறியலோடு வழங்குகிறார்கள். எனது பையன் வீட்டில் சாப்பிடுவதைக் காட்டிலும் பள்ளிக்கூடத்தில் வழங்கும் உணவையே மிகவும் விரும்புகிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் நான்கூட சத்துணவு சாப்பிட்டு படித்தவன்தான். ஆனால், தமிழ்நாட்டில்…

கொரோனா காலத்திலும் கொரியாவை கலக்கிய தமிழர்!

உலக மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்ட கொடூரமான வைரஸாக கொரோனா இருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் கிடைத்த தனிமையை பயன்படுத்தி தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் தென்கொரியாவில் ஆராய்ச்சி பேராசிரியராக பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜை பற்றி சொல்லியே ஆகவேண்டும். கொரியா தமிழ்ச்சங்கம் வழியாக எனக்கு அறிமுகமானவர் நண்பர் ஆரோக்கியராஜ். தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள ஸெஜோங் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், தென்கொரியாவைச் சேர்ந்த யூடியூபரான லஸோல் என்பவரின் உதவியோடு கொரியா தமிழ்…