Browsing: கொரோனா

ஆஸ்திரேலியாவை அலறவைத்த கொரோனா ஆடு!

கொரோனா காலத்தில் மனிதர்கள் முடிவெட்டிக்கொள்ள பயந்தார்கள். அதன்காரணமாக நீளமான முடியை வளர்க்க வேண்டியதாயிற்று. கொரோனா காலத்தில் முடிவளர்க்க தொடங்கிய இந்திய பிரதமர் மோடி, தடுப்பூசி போட்டுக்கொண்டும் முடியையும் தாடியையும் வெட்டாமல் வலம் வருகிறார். இந்தப் படத்தில் இருப்பது பனிப்பிரதேசத்தில் வசிக்கும் அருவறுக்கத்தக்க பனிமனிதன் அல்ல. ஆஸ்திரேலியாவில் கொரோனா காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விட்ட செம்மறி ஆடு. இதை முதலில் பார்த்தவர்கள் நெருங்கவே அஞ்சினார்கள். ஆனால் ஆஸ்திரேலியா அரசு இது ஒரு ஆடுதான் என்று தெளிவுபடுத்தியவுடன் தைரியமாக நெருங்கினார்கள். பிறர்…

பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 424 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 506 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 21 ஆயிரத்து 672 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18…

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.” என்ற அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில்,…

9 மாதங்களுக்கு பிறகு ஓடத்தொடங்கியது ஊட்டி மலை ரயில்

கொரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த 9 மாதங்களாக நிறுததப்பட்ட ஊட்டி மலை ரயில், தனியார் நிறுவனம் ஏற்பாட்டில் தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரியில் உள்ள சினிமா தியேட்டர்களைத் திறக்கவும், 7-ஆம் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்கவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதனால், புகழ்பெற்ற மலை ரயில் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், கோவை மாவட்டம், காரமடையைச் சேர்ந்த ஓர் தனியார் நிறுவனத்தின் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே…

ஜனவரியில் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு உத்தரவு

10, 12-ஆம் வகுப்புகளை நடத்த, ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, இந்த அமைப்பின் இயக்குநர் ஆராதோன் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “எங்கள் அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்திலும் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் ஜனவரி 4-ஆம் தேதிக்குள் திறக்க வேண்டும். தற்போது ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் உரிய விளக்கங்களை பெறுவதற்கும், புராஜெக்ட் மற்றும் செய்முறைத் தேர்வுகளை…

ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் – TAMIL LEADERS – 3

ராமசாமி நாயக்கரா – அப்பா இம்மாதிரி சொல்லிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வருகிறார்கள் தமிழர்கள். இந்த ‘‘மூச்சுப் பயிற்சி’’ சென்ற பல வருஷ காலமாக, விடாமல், தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, இந்தப் பெருமூச்சிலே ஆனந்தமும் ஆத்திரமும் கலந்து களிக்கின்றன. இத்தகைய முரண்கொண்ட உணர்ச்சி களைத் தமிழர்களின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் ராமசாமி நாயக்கர் ஓர் அபூர்வமான பிறவியாகும். பிற்போக்காளர்கள் சபிக்கவும். தாராள நோக்குள்ளவர்கள் வாழ்த்தவும், ஆங்கில தேசத்தில் வாழ்ந்தும் வளர்ந்தும் வீழ்ந்தும், விடாமல் முண்டிக் கொண்டிருக்கிற மாஜி முதல்…

கனடா – Indian Scientists series – 3

மனிதனுக்கும், பிரபஞ்சத்திற்கும், அவற்றை உருவாக்கி யவருக்கும் என்ன தொடர்பு? தத்துவஞானிகளையும் சிந்தனையாளர்களையும் எப்போதுமே ஈர்த்துவரும் கேள்வி இது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் இந்திய தத்துவ ஞானிகள் பலர் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர்தான் கனடா. இவருடைய வைசேசிகா சூத்திரங்கள் என்ற நூல் அறிவியல், தத்துவம், மதம் ஆகியவை கலந்ததாக இருக்கிறது. அணுக் கோட்பாடுதான் இதன் உள்ளடக்கம். இவருடைய அணுக் கோட்பாடு, இவருக்கு பின்னால்…

1 2 3