கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 18 – ராதா மனோகர்
பாக்கியத்தம்மாள் நெஞ்சில் ஒலித்த வல்லாளன் குளம்பொலி பாலாவோரையை புரட்டி போட்ட மழை ஓய்ந்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டிருந்தது. அந்த மழையை விட மோசமானதாக இருந்தது பாலாவோரை மக்களின் வாழ்க்கை தரம். வழுக்கையாற்று பணிகள் ஒருபுறமும் நேமிநாதர் சமண பள்ளியின் கட்டுமான பணிகள் மறுபுறமுமாக நடைபெற்று கொண்டிருந்தன. புத்தூர் நம்பியும் பாக்கியத்தம்மாளும் மக்களிடம் நல்ல உறவினை பேணியிருந்த காரணத்தால் அரச பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் போதிய கூலி உடனேயே கிடைக்காவிடினும் முழுமனதோடு பணியாற்றினர். அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற அரச உதவிகள் எல்லாமே…