கொரியா வாழ் தமிழனின் பார்வையில் புரட்சிக் கவிஞரின் எழுச்சி வரிகள் – சகாய டர்சியூஸ் பீ
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினமான இன்று அவரின் கவிதைகளில் எனக்கு பிடித்த, இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கும் சில வரிகள் “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும், சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்”. – என்று தமிழுக்கும் அமுதென்று பேர் நூலில் இடம்பெற்ற பாடலில் தமிழனாய் நிற்பவர் இனப்பெயர் ஏன்”என்று பிறன்எனைக் கேட்டால் மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம். “நான்தான் திராவிடன்” என்று…