சிந்தனைக் களம் 15 – Bamini Rajeswaramudaliyar
பழக்கதோஷம் என்பது எமக்கு நாம் உருவாக்கும் சிறையாகும். சிறையினுள் இருந்து கொண்டு உலக அறிவை பெறுவது என்பது குதிரைக் கொம்பாகும். உலக அறிவு ( புத்தகக் கல்வி அல்ல) புரிந்துணர்ந்தல், எதனையும் துணிந்து கற்கும் பயிலும் ஆர்வம், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை என்பன மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழியினைக் காட்டும். நான் இப்படித்தான் என்ற பிடிவாதம் அறிவீனமா அல்லது சோம்பேறித்தனமா என சிந்திக்கிறேன். தனக்கு நன்மைதராத எதிர்மறை சிந்தனைகளை மாற்றுவதற்கு பிடிவாதம் எதற்கு? என்னை நான் மாற்றவும்…