சிந்தனைக் களம் – 32 – Bamini Rajeswaramudaliyar
அனுபவங்கள் மென்மையான மனிதர்களை கடுமையானவர்களாக மாற்றி விடுகிறது. இது உணர்தலால் உருவாகும் நிலையே அன்றி மனம் மரத்துப் போவதால் அல்ல. மனம் மரத்தால் மன/உடல் நோயை உண்டாக்கி விடும். கவனம். நான் மட்டும் என்ன அழவா பிறந்தேன் என்று உணர்ந்து விழித்து விட்டால், தன்னைத்தான் திருத்திக் கொண்டால், தவறான மனிதர்களை விட்டு விலகினால், தனக்கு சம்மந்தமில்லாத விடையங்களில் தலையிடாமல் விலகி நின்றால், ஒருவரின் கதையை ஒருவருக்கு கூறாமல் இருந்தால் மனம் நொந்து கண்ணீர் வடிக்க காரணங்கள் இல்லாமல்…