சிந்தனைக் களம் – 40 – Bamini Rajeswaramudaliyar
ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் நீரைப் போன்ற குளிர்மையும், நெருப்பை போன்ற கடுமையும் இயற்கையான பிறப்புரிமையாக அமைந்துள்ளது. இவைகள் இரண்டையும் சரியானபடி நேரம்/காலம் அறிந்து, எங்கே எப்படி பயன்படுத்துவது என்ற அறிவே மனிதனின் வாழ்வின் நிம்மதி, சந்தோஷம்,வெற்றியின் இரகசியமாகிறது. ஆனால் வளரும் சூழலும் கலாச்சாரமும் இவை இரண்டையும் பிரித்து ஆணை நெருப்பாகவும் பெண்ணை நீராகவும் மாற்றி வளர்ப்பதன் விளைவு, இவர்கள் தம்மைத்தாம் அறிய முடியாமல் ,தம்பலத்தை இழந்து. இருபாலரும் மனப் போராட்டத்திற்குள்ளாகி இப்படித்தான் வாழ வேண்டும்போலும் என்ற நிச்சயமற்ற தன்மையுடன்…