Browsing: சீமான்

அதிகாரத்தை கைப்பற்றி ஆலயங்களில் தமிழில் வழிபட ஆணை – சீமான் அதிரடி

தமிழுக்கு தாய் நாடு உள்ளது சமஸ்கிரதத்திற்கு தனியே ஒரு மாவட்டமாவது உள்ளதா தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் வழிபாடு வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கோவில் திருத்தலமான ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் வழி வழிபாட்டினை துவக்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் உலகில் மிக தொன்மையான மொழி தமிழ் தமிழ்நாட்டில் என் தாய்மொழி…

சீமான் மாதிரி முட்டாளை திருமா ஆதரிக்கலாமா?

திமுக மீதோ, கலைஞர் குடும்பத்தினர் மீதோ கேவலமான தாக்குதலை யார் தொடுத்தாலும் கருத்துச் சொல்லாதவர்கள், நாற்றமெடுத்த பொய்கோலிகளுக்கு சப்போர்ட் செய்வது ஏன்? https://youtu.be/1r-KDz1jpFA

இஸ்லாமியர்களுக்கே இஸ்லாம் மதத்தை புரியவில்லையா?

கோவை குண்டு வெடிப்பு கலவரத்தில் கைதான இஸ்லாமியர்களில் சிலரை நன்நடத்தையின் அடிப்படையில் 2009ம் ஆண்டு அண்ணா பிறந்த நாள் அன்று திமுக அரசு விடுதலை செய்தது. அதற்கு துக்ளக் சோ ராமசாமி கடுமையான எதிர்ப்பு காட்டினார். 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களின் விடுதலை என்பதை யாருமே நினைக்கவில்லை. தற்போது அவர்களின் விடுதலைக்காக திமுக அரசு சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் ஆர்எஸ்எஸ்-சங்பரிவார அமைப்புகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய சிறைக் கைதிகளின் விடுதலையைச் சிக்கலாக்க…

கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறு தவறுகள் – Venkat Ramanujam

நேற்று அந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் மிகவும் கொதி நிலையில் இருந்தார் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேர் என்பது தமிழ்நாட்டில் அல்ல ஆனால் மலையாள மண்ணின் டிஎன்ஏ என அடியேன் சொன்னதால்.. கோபம் தலைக்கேறி மயிலாப்பூருக்கு வந்து பிரித்து விடுவேன் என்றார்.. ஓகே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஸ்மைலி இமோஜி இட்டேன்.. அவர் தன் நிலை மறந்து ஒருமையில் மோசமாக போட்ட பின்னூட்டத்தை எல்லாம் நீக்கிவிட்டேன்.. காரணம் இதுவரை அவர் மிகவும் கண்ணியமாக பேசி…

நாகரிகத்தைக் குலைக்கும் நாம் தமிழர் கட்சி! – சுப.வீரபாண்டியன்

பாஜக விற்கும், நாம் தமிழர் கட்சிக்குமிடையே இரண்டு மிக நெருக்கமான ஒற்றுமைகள் உண்டு, ஒன்று, திராவிட இயக்கத்தை எதிர்ப்பது. இன்னொன்று, ஆபாசமான சொற்களால் பின்னூட்டம் இடுவது. நாம் தமிழர் கட்சியைப் பொருத்தளவு இன்னொரு நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நிதானமாக இருக்கும்போது பேசியது. நிதானமற்ற நிலையில் இருக்கும்போது பேசியது என இரு நிலைகள் உள்ளன. இரண்டாவது நிலையில் பேசியதை எல்லாம், “தெளிந்த பிறகு” அது என் குரல் இல்லை என்று சொல்லிவிடுவது! அண்மையில் அக்கட்சியின் தலைமை…

சில கட்சிகளுக்கு கல்லறை கட்டப்போகும் தேர்தல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் எத்தனை அணிகள் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் இரண்டு அணிகளுக்கு இடையில்தான் நிஜமான போட்டி இருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உருவான திமுக அணி அப்படியே உருக்குலையாமல் இருக்கிறது. பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி திமுக அணியிலிருந்து விலகிவிட்டது என்று ஊடகங்கள் பெரிதாக பேசினாலும், சரத்குமாரின் கட்சியைக் காட்டிலும் அதுஒன்றும் பெரிதில்லை என்பதை எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். ஒரு நபர் லெட்டர்…