சும்மா கிடைத்ததா சுதந்திரம் – 16 – Fazil Freeman Ali
ப்ளைமத்திலிருந்து (Plymouth) ஆங்கில படைகளை வழிநடத்திய ஃப்ரான்சிஸ் ட்ரேக் (Francis Drake), ஸ்பேனிஷ் ஆர்மடாவின் பலத்தை ஒற்றர்கள் மூலம் மிக நன்றாகவே அறிந்திருந்தார். எனவே நேரடி தாக்குதல்களை கூடுமானவரை தவிர்ப்பது என்பதை முன்கூட்டியே முடிவெடுத்துவிட்டார். இந்த ட்ரேக் ஏற்கனவே பலமுறை தென் அமேரிக்க நாடுகளில் இருந்து செல்வத்தை ஏற்றிவரும் ஐரோப்பிய கப்பல்களை அட்லான்டிக் சமுத்திரத்தில் வழிமறித்து சூறையாடியவர். ஆங்கிலேயர்களால் ஹீரோவாகவும் ஐரோப்பியர்களால் கடற்கொள்ளயனாகவும் பார்க்கப்படுபட்டவர். லிஸ்பனிலிருந்து கிளம்பிய ஸ்பேனிஷ் ஆர்மடா ஸ்பெய்னின் கடிஸ் துறைமுகத்தில் (Spanish port…