Browsing: சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்?

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 14 – Fazil Freeman Ali

போர்ச்சுக்கிசிய‌ர், ட‌ச்சுக்கார‌ர்க‌ளை தொட‌ர்ந்து இந்திய‌ ம‌ண்ணில் கால்ப‌திக்க‌ வ‌ந்த‌ ஐரோப்பிய‌ர்க‌ள், ஆங்கிலேய‌ர்க‌ள். இவ‌ர்க‌ளும் ப‌டை ப‌ட்டாள‌ங்க‌ளோடு வ‌ந்து போரிட்டு நேர‌டியாக‌ நாட்டை பிடித்துவிட‌வில்லை. அப்ப‌டி வ‌ந்திருந்தால் ட‌ச்சுக்கார‌ர்க‌ளுக்கு திருவிதாங்கூரில் நேர்ந்த‌ க‌திதான் இவ‌ர்க‌ளுக்கும் ஏற்ப‌ட்டிருக்கும். வ‌ணிக‌ம் செய்ய‌ கிழ‌க்கிந்திய‌ க‌ம்பேனி என்ற‌ பெய‌ரில் 1608-ல் குஜ‌ராத்தின் சூர‌த் துறைமுக‌த்தில் ந‌ங்கூர‌மிட்டது முத‌ல் ஆங்கிலேய‌ க‌ப்ப‌ல். The East India Company (EIC) என்பது 1600-ம் ஆண்டில் “ஒரு பகுதி அரசுக்கும் ஒரு பகுதி பெருவணிகர்களுக்கும்” என்ற அடிப்படையில்…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 13 – Fazil Freeman Ali

ஒருவ‌ருக்கு ம‌த‌ ந‌ம்பிக்கை இருக்கிற‌தோ இல்லையோ, ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ந‌ல்ல‌வை செய்ப‌வ‌ர்க‌ளாக‌வும், தீய‌வ‌ர்க‌ள் தீய‌வை செய்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கிறார்க‌ள், இல்லையா..? ஆனால் அடிப்ப‌டையில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளைக்கூட‌ தீய‌ செய‌ல்க‌ள் செய்ய‌வைக்க‌ ம‌த‌-சாதிய‌ வெறி எனும் போதையை ஊட்டுவ‌து போதுமான‌தாக‌ இருக்கிற‌து. ம‌து போதையில் இருப்ப‌வ‌ர்க‌ளைப் போன்றே இவ‌ர்க‌ளும் என்ன‌ செய்கிறோம்..? ஏன் செய்கிறோம்..? எத‌ற்கு செய்கிறோம்..? என்று புரியாம‌லேயே ப‌டுபாத‌க‌ செய‌ல்க‌ளை ச‌ர்வ‌சாதார‌ண‌மாக‌ செய்துவிடுகிறார்க‌ள். ப‌ல‌ ம‌ன்ன‌ர்க‌ளும் நில‌ உடைமையாள‌ர்க‌ளாக‌ இருந்த‌ ப‌ல‌ இடைநிலை சாதியின‌ரும் இந்த‌ சாதிவெறி த‌லைக்கேறி…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 12 – Fazil Freeman Ali

ப‌ல்வேறு ச‌ம‌ய‌ங்க‌ள் ம‌க்க‌ள் ம‌த்தியில் வாழ்ந்திருந்த‌ கால‌ம் அது. தீப‌க‌ற்ப‌த்தின் ஒவ்வொரு மொழிக்குடும்ப‌த்திலிருந்தும் உருவான‌ அறிவுசார் பெரும‌க்க‌ள் புதுப்புது சித்தாங்க‌ளை, க‌ருத்திய‌ல்க‌ளை, வாழ்விய‌ல் நெறிமுறைக‌ளை வ‌குத்திருந்த‌ன‌ர். அவை அனைத்திலுமே ஆண்-பெண், ந‌ல்ல‌வ‌ன்-கெட்ட‌வ‌ன், அறிஞ‌ன்-அறிவிலி என்ற‌ த‌ர‌ப்பிரிவுக‌ள்தான் இருந்த‌ன‌வேயொழிய‌ இவ‌ர்க‌ள் உருவாக்கியிருந்த‌ வ‌ர்ண‌-சாதிய‌ பிரிவுக‌ள் இருந்திருக்க‌வில்லை. இந்த‌ ஒவ்வொரு ச‌ம‌ய‌த்துக்குள்ளும் ஊடுருவி அங்கும் மூட‌ந‌ம்பிக்கைக‌ளையும் சாதிய‌த்தையும் விதைத்த‌ன‌ர் இந்த‌ உய‌ர்ந்த‌(?) ம‌னித‌ர்க‌ள். ஊடுருவ‌ முடியாம‌ல்போன‌ க‌ருத்திய‌ல்க‌ளை அழித்து ஒழித்தன‌ர். ஒரு கால‌த்தில் தேச‌ங்க‌ள் க‌ட‌ந்தும் த‌ழைத்திருந்த‌ ச‌ம‌ய‌ங்க‌ள்கூட‌ ம‌ன்ன‌ர்க‌ளின்…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 11 – Fazil Freeman Ali

ஒருபுற‌ம் த‌ம் திட்ட‌த்துக்கு இண‌ங்க‌ம‌றுத்த‌ அர‌ச‌ர்க‌ளிட‌ம், “நீங்க‌ள் தெய்வ‌ அனுக்கிர‌க‌த்தோடு பிற‌ந்த‌வ‌ர்க‌ள், அது உங்க‌ளுக்கே தெரியாம‌ல் இருப்ப‌துதான் வேடிக்கையான‌ வேத‌னை” என்று தொட‌ர்ந்து உருவேற்றிக்கொண்டே ம‌றுபுற‌ம் அர‌ச‌ குடும்ப‌த்தின‌ரை வ‌ளைத்துப்போட்ட‌ன‌ர் இந்த‌ வ‌க்கிர‌ர்க‌ள். “ஒருவ‌னுக்கு ஒருத்தி” என்று வாழ்ந்திருந்த‌ ச‌முதாய‌த்தில், அது பாம‌ர‌ ம‌க்க‌ளுக்குத்தான் பொருந்தும், ம‌ன்ன‌ர்க‌ளுக்க‌ல்ல‌, ம‌ன்ன‌ர்க‌ள் ப‌ல‌தார‌ம‌ண‌ம் புரிய‌லாம்” என்றொரு சாஸ்திர‌ம் எழுதி, அத‌ன்மூல‌ம் த‌ம் குடும்ப‌த்து பெண்க‌ளில் ப‌ல‌ரைக்கூட‌ ம‌ன்ன‌ர்க‌ளுக்கு இணைய‌ர்க‌ளாக‌வும் துணைய‌ர்க‌ளாக‌வும் ஏற்க‌ன‌வே ஆக்கியிருந்ததால், இது இவ‌ர்க‌ளுக்கு எளிதில் ஆக‌க்கூடிய‌ காரிய‌மாக‌வே…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 10 – Fazil Freeman Ali

இப்ப‌டி வாழ்க்கை அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த‌ சூழ‌லில், இங்கு வ‌ந்து குடியேறியிருந்த‌ இன‌த்திலொன்று “இறை” என்ற‌ க‌ற்ப‌னாவாத‌ க‌ருத்திய‌லை கண்டுபிடித்த‌து. அதுவ‌ரை பிர‌ப‌ஞ்ச‌ ஆற்ற‌லான‌ இய‌ற்கையுட‌ன் ஒன்றி வாழ்ந்திருந்த‌ ம‌க்க‌ளிட‌ம், “அந்த‌ இய‌ற்கையையும் ப‌டைத்த‌துதான் இறை” என்று பிர‌ச்சார‌ம் முடுக்கிவிட‌ப்ப‌ட்ட‌து. “ந‌ம் புல‌ன்க‌ளுக்கு புல‌ப்ப‌டாத‌ ஒன்று இருக்கிற‌து, அத‌ன் பெய‌ர்தான் இறை. எல்லாம் அந்த‌ இறைவ‌னின் நாட்ட‌ப்ப‌டியே ந‌ட‌க்கிற‌து. இறைவ‌னே ந‌ம்மை உருவாக்கி, உண‌வ‌ளித்து, வாழ‌வைத்து, ம‌ர‌ணிக்க‌வும் செய்ப‌வ‌ன்” என்று துவ‌ங்கி நிறைய‌ புதுப்புது க‌தைக‌ளை உருவாக்கிய‌து அந்த‌…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்? – 9 – Fazil Freeman Ali

இது ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ உல‌கின் ப‌ல்வேறு பாக‌ங்க‌ளில், சின்ன‌ச்சின்ன‌ மாற்ற‌ங்க‌ளோடு வெவ்வேறு வ‌டிவ‌ங்க‌ளில் ந‌ட‌ந்திருந்த‌ க‌தைதான். குறிப்பாக‌ இந்திய‌த் துணைக்க‌ண்ட‌த்தில் அர‌ங்கேறிய‌ க‌தை இது… அந்த‌ ர‌ம்மிய‌மான‌ நில‌ப்ப‌குதிக்கு ம‌க்க‌ள் குடியேறி சில‌ த‌லைமுறைக‌ளே ஆகியிருந்த‌து. அழ‌கான‌ அர‌ண்போன்ற‌ நீண்ட‌ ம‌லைத்தொட‌ர்க‌ள், புத்துண‌ர்ச்சியூட்டும் நீர்வீழ்ச்சிக‌ள், வ‌ளைந்து நெழிந்து கிளைக‌ள் ப‌ர‌ப்பி ஓடும் நெடிய‌ ஆறுக‌ள், அட‌ர்த்தியான‌ காடுக‌ள், க‌ண்ணுக்கெட்டிய‌ தூர‌ம்வ‌ரை புல்வெளிக‌ள் என்று அப்ப‌டியொரு சுவ‌ர்க்க‌பூமி அது. இதுவ‌ரை ம‌னித‌ர்க‌ள் கால் ப‌தித்திராத‌தால் மாசுப‌டாத‌ ம‌ண்ணும், நீரும்,…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்..? – 8 – Fazil Freeman Ali

உல‌க‌ம் முழுக்க‌ 80 ஆண்டுக‌ளாக‌ ஐரோப்பிய‌ ஏகாதிப‌த்திய‌ அர‌சுக‌ளுக்குள் ந‌ட‌ந்த‌ போர் (1566 முத‌ல் 1648 வ‌ரை) என்ப‌து “கால‌னிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ நாடுக‌ளின் வ‌ள‌ங்க‌ளும் விளைபொருட்க‌ளும் யாருக்கு சொந்த‌ம்” என்ற‌ குடுமிப்பிடி ச‌ண்டைதான். இதில் யார் வென்றாலும் தோற்ற‌தென்ன‌வோ கால‌னிக‌ளாகிப்போன‌ நாடுக‌ள்தான். பின்னாட்க‌ளில் மூன்றாம் உல‌க‌ நாடுக‌ள் என்றொரு நீண்ட‌ ப‌ட்டிய‌ல் உருவாக‌ கார‌ண‌மாக‌ இருந்த‌து இந்த‌ கால‌க‌ட்ட‌தின் ஏகாதிப‌த்திய‌ கொள்ளைக‌ளும், சுர‌ண்ட‌ல்க‌ளும், அடித்துப்பிடுங்கல்க‌ளும்தான். அன்று வீழ்ந்த‌ நாடுக‌ளுள் பெரும்பாலான‌வை இன்றுவ‌ரை எழ‌வே இல்லை. அர‌சிய‌ல் விடுத‌லை என்றால்…