பாஜகவுக்கு பயந்து திமுகவையே பாஜகவாக மாற்றத் துடிக்கும் திமுக நிர்வாகிகள்! – bjp vs dmk
கடலுக்கடியில் இருக்கும் சுண்ணாம்புப் பாறையை ராமர் கட்டிய பாலம் என்று கூறி, தென் தமிழகத்தை வளம்கொழிக்கச் செய்யும் சேதுசமுத்திர திட்டத்தை முடக்கியவர்கள் பாஜக சங்கிகள். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு “ராமர் எந்த கல்லூரியில் படித்து இன்ஜினியர் ஆனார்?” என்று இடக்காக பதிலளித்தவர் தலைவர் கலைஞர். ஆனால், இப்போது பாஜகவினர் முருகனைக் கைப்பற்றி திமுகவை தோற்கடித்துவிடுவார்கள் என்று பயந்து, இவர்களே முருகனின் அருளோடு உதயநிதியின் பிரச்சார பயணத்தை வரவேற்று போஸ்டர் அடிக்கும் அளவுக்கு போய்விட்டார்கள். முருகன்…