Browsing: ஜெமோ

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு… – ஜே.மஞ்சுளாதேவி

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, ஜெ.மஞ்சுளாதேவி எழுதிக்கொள்வது… சாகித்ய அகாதமி, யுவபுரஸ்கார் விருது பற்றி நிறைய புலம்பி எழுதியிருந்தீர்கள்… நீங்கள் சொல்பவர்கள் மட்டும்தான் இலக்கியவாதிகள்,விஷ்ணுபுர விருது பெற்றவர்கள் மட்டும்தான் திறமையாளர்கள் என்று நீங்கள் நம்பலாம், தவறில்லை, ஆனால் அதை மற்றவர்கள் மீது திணிப்பதற்கு உங்களுக்கு யார் சார் உரிமை கொடுத்தார்கள். விருதுபெற்ற ப.காளிமுத்துவை உங்களுக்கு எத்தனை நாளாகத் தெரியும், விருது அறிவிப்பிற்குப் பிறகுதானே. எந்த தைரியத்தில் சொல்கிறீர்கள்? இனிமேல்தான் அவர் எழுதனும் இனிமேல்தான் வாசிக்கனும் என்று. அவர் வாசிப்பது…