Browsing: தந்தை பெரியார்

சாதியை ஒழிக்க பெரியார் என்னா செஞ்சாரு பாஸ்? – Vijay Bhaskarvijay

“பாஸ் பாஸ் பெரியார் என்னத்த பாஸ் செய்தாரு. தமிழ்நாட்டுல் எங்க சாதி ஒழிஞ்சது பாஸ். இன்னமும் இருக்கு பாஸ் சாதி” “ஜி நீங்க ஒரு வீட்டுக்கு போறீங்க. அதாவது மூணு வருசமா பூட்டிக் கிடக்கிற வீடு” “பாஸ் நான் பெரியாரப் பத்தி பேசுறேன்” “நான் பாழடைஞ்ச வீட்டப் பத்தி பேசுறேன் ஜி” “சரி பாஸ் நீங்க சொல்றதுக்கே வர்றேன். மூணு வருசமா பூட்டிக்கிடக்குற வீடு இருக்கு சரி, அதுக்கென்ன” “அத எப்படி சுத்தப்படுத்துவீங்க ஜி” “இது ஒரு…

நீதிபதியின் தீர்ப்பு குறித்து தந்தை பெரியார் என்ன சொன்னார் தெரியுமா?

நீதிபதிகள் ஒரு தீர்ப்பளித்தால், அதை விமர்சித்தால்,தவறு என்று சொன்னால், அதுநீதிமன்ற அவமதிப்பு என்று அச்சுறுத்தப்படுகிறது. ஆனால், 1956லேயே நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து வந்தவர்களா? நீதிபதியை நியமிக்கும் ஜனாதிபதியையோ, பிரதமர்களையோ, முதலமைச்சர்களையோ விமர்சிக்கும்போது, அரசு சம்பளம் வாங்கும் நீதிபதி யோக்கியர்களாக இருப்பார்களா என்று கேட்டிருக்கிறார் தந்தை பெரியார். இதுதொடர்பான அவருடைய கருத்து கீழே தரப்பட்டிருக்கிறது. “உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிப் பொது மக்கள் கருத்துத் தெரிவிப்பது கோர்ட்டை அவமானப் படுத்துவதாகும் என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப்படுத்த வேண்டும்…

அசுரர்கள் பிறப்பைத் தடுக்க பிள்ளையார் செய்த காரியத்தைப் பாருங்க – தந்தை பெரியார்

பிள்ளையார் பிறப்பு எனும் தலைப்பில் தந்தை பெரியார் குடிஅரசு (26.08.1928) ஏட்டில் எழுதிய கட்டுரை. இளைஞர்கள், மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கடவுளர் கதை. அதிகமாகப் பரப்புங்கள்: “இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை “எண்ணித் தொலையாது. ஏட்டிலடங்காது” என்பதுபோல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியதுகள் ஏற்படுத்தி இருப்பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும்,…

தந்தை பெரியார் அறிவுச்சுவடி – எழுத்தாளர் விந்தன் தயாரித்தது

எழுத்தாளர் விந்தன் தயாரித்த தந்தை பெரியார் அறிவுச்சுவடி பிடிஎப் வடிவில்… சுவாரசியமானது… சுருக்கமானது… குழந்தைகளுக்கும் புரியும் வகையில் அறிவூட்டுவது… periyararivuchchuvadi

தமிழ்நாட்டின் எல்லைச் சாமிகள் – ஆதனூர் சோழன்

இருள் கவியத் தொடங்கிய நேரம். அந்தக் கிராமத்தின் எல்லைக்குள் ஒருவன் மூட்டை முடிச்சுகளுடன் நுழைந்தான். அவனை ஒரு உருவம் வழிமறித்தது.. “யார் நீங்க? எந்த ஊர்? இங்கே எதுக்காக வர்றீங்க?” என்றது. “ஐயா, நான் பக்கத்து ஊருதானுங்க. அங்க இருக்கிற மனுஷங்க எல்லோரும் கெட்டவங்களா இருக்காங்க. வாழப் பொறுக்காதவங்களா இருக்காங்க” என்றான் அவன். அவனை அப்படியே திருப்பி அனுப்பியது அந்த உருவம். அடுத்தநாள், இதேபோல இன்னொருவன் அந்தக் கிராமத்து எல்லைக்குள் நுழைந்தான். அவனையும் அந்த உருவம் வழிமறித்தது……

திராவிட இயக்க வரலாறை ஏன் அடிக்கடி சொல்ல வேண்டும்? – Paneerselvan

நாம் நம் வரலாற்றைத் தொடர்ச்சியாக ஏன் பேசவேண்டும் என்றால், திரிபுகள் எப்பக்கம் இருந்தும் வரலாம் என்பதாலேதான். * தோழர் ஜீவானந்தம்-வாழ்வும் வரலாறும் – தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்! * இன்றைக்கு பெரியாரை குற்றம் சொல்லுவதற்காக ஜீவானந்தத்தை உயர்த்தி பிடித்து கொண்டாடுவது,என்ற உத்தி தமிழ்நாட்டில் சிலரால் வேண்டுமென்றே முன்னிலைப் படுத்தப்படுகிறது. * அவருடைய ஏழ்மையான வாழ்வை குற்றம் சொல்லுவதோ அவருடைய தியாகத்தை மறுப்பதோ நம்முடைய நோக்கம் அல்ல. * அன்றைய இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தெம்மம் பட்டி…

அவமானங்களில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்த மு.க.ஸ்டாலின்…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து அரங்கத்தை பார்த்தார் ஸ்டாலின். அவருடைய பார்வை தொலைக்காட்சியில் பதவியேற்பை பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்களையும் நோக்கியிருந்தது. அந்த தருணத்திற்காகவே காத்திருந்ததைப் போல கூடியிருந்தோரின் கரவொலி அதிர்ந்தது. பார்த்தவர் விழிகளில் பரவசமும், ஆனந்தக் கண்ணீரும் வழிந்தது. 10 ஆண்டுகள் பாழ்பட்டுக் கிடந்த தமிழகத்தை பண்படுத்த ஒருவன் வந்துவிட்டான் என்று தமிழர்கள் பரவசப்பட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த கூத்துகள் அனைத்தும் தமிழகத்தை உலக அரங்கில் மட்டுமல்ல, இந்திய…