Browsing: தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணப்பு குழு தலைவர்

ஜெயலலிதா ஆட்சியில் போராடவே அஞ்சிய நிலையில் எங்களை முன்னிறுத்தி போராடிய திமுக இப்போது அடக்குவது ஏன்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் ஏராளமான மர்ம முடிச்சுகள் உள்ளன. பாதிக்கப்படும் விவசாயிகளை சந்திக்க விடாமல் அடக்கிக் கைது செய்து அசிங்கப்படுத்துகிறது திமுக அரசு https://youtu.be/2GsrvbJYTsY

நல்லது செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்து, மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்துவதா? – திமுக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, பரந்தூர் விமான நிலையம் தொடர்பான வெளிவராத உண்மைகளை எடுத்து கூற வந்துள்ளோம். பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள ஏகளாபுரம் கிராமத்திற்கு சென்று விவசாயிகளை சந்திக்க சென்றபோது கிராமத்திற்கு 2 கிலோ மீட்டர் தூரத்தில் 200 போலீசார் வழிமறித்தனர். குமரி முதல் டெல்லி வரை பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதுபோன்ற காவல் துறை அட்டூழியத்தை…