Browsing: தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்! – டி.யூ.ஜெ. வலியுறுத்தல்.

தி.மு.க. தலைமை நிலையமான, அறிவாலயத்தில், கையூட்டு,பெற்று கொண்டு, கேள்வி கேட்பதாக, பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை, அவதூறாக, கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டி.யூ.ஜெ. வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, சங்கதின் மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 26- ந் தேதி,பிரதமர் மோடி பல்வேறு நலத் திட்டங்களைத் துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்திற்கு, தேவையான, கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின்…

பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பு

தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாடு பத்திரிகையாளர் நலன்களை காக்க, பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்புக்கு ஏற்ப, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து இந்த வாரியம் செயல்படுத்தும். அத்துடன் நலவாரிய உதவித் தொகைகள், மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையிலும் இந்த பத்திரிகையளர் நல…

டி.எஸ்.ரவீந்திரதாஸ் 9 ஆம் ஆண்டு நினைவு நாள்

பணி புரியும் பத்திரிகை நிறுவனங்களாலும், அரசு அதிகாரிகளாலும் ஒதுக்கப்பட்டு உரிமைகளையும் இழந்து ஊமைகளாய் வாழ்ந்த 90% ஊரக பத்திரிகையாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்றுதிரட்டி, போராடி அவர்களுக்கு பல சட்டபூர்வ உரிமைகளை பெற்றுத்தந்த இயக்கம் டி. யூ. ஜே எனவும், இந்த இயக்கத்தை 22 ஆண்டுகளாக கட்டிக்காத்து வழிநடத்திய பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் தலைவர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் என அவரது 9ஆம் ஆண்டு நினைவு நாளில் டி. யூ. ஜே. மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து…

சிந்தனையாளர் ஆனந்த், பத்திரிகையாளர் கௌதம் நவ்லேகாவை கைது செய்ய தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் எதிர்ப்பு!

சிந்தனையாளரும், பேராசிரியருமான  ஆனந்த் டெல்டும்டே மற்றும் மனித உரிமை ஆர்வலரும், பத்திரிகை ஆசிரியருமான கௌதம் நவ்லேகா ஆகிய இருவரையும் சிறைப்படுத்தும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க (டி.யூ.ஜே.) மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகறிந்த சிந்தனையாளர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே  மற்றும் மனித உரிமை ஆர்வலரும் எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி    இதழின்  ஆசிரியருமான  கௌதம் நவ்லேகா…