அவமானங்களில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்த மு.க.ஸ்டாலின்…
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து அரங்கத்தை பார்த்தார் ஸ்டாலின். அவருடைய பார்வை தொலைக்காட்சியில் பதவியேற்பை பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்களையும் நோக்கியிருந்தது. அந்த தருணத்திற்காகவே காத்திருந்ததைப் போல கூடியிருந்தோரின் கரவொலி அதிர்ந்தது. பார்த்தவர் விழிகளில் பரவசமும், ஆனந்தக் கண்ணீரும் வழிந்தது. 10 ஆண்டுகள் பாழ்பட்டுக் கிடந்த தமிழகத்தை பண்படுத்த ஒருவன் வந்துவிட்டான் என்று தமிழர்கள் பரவசப்பட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த கூத்துகள் அனைத்தும் தமிழகத்தை உலக அரங்கில் மட்டுமல்ல, இந்திய…