துறவியும் பூனையும் – FreemFazilan Ali
அந்த துறவி சுற்றுவட்டாரம் முழுவதும் பிரசித்திபெற்றிருந்தார். எளிமையான உணவு, பகட்டில்லாத உடை, எப்போதும் முகத்தில் குடியிருக்கும் சாந்தமான புன்னகை என்பவையே அவர் பற்றற்றவர் என்பதை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டிற்று. “பற்றற்ற நிலையை பற்றியிருப்பதும் ஒரு பற்றுதானே” என்று சொல்லப்படுவதற்கொப்ப அவருக்கும் ஒரு சிறு பற்று இருந்தது. அது, அவர் பாசத்துடன் வளர்த்தும் பூனை. அதுகூட அவர் விரும்பி வாங்கி வளர்த்தும் பூனை அல்ல, அவருடைய குடிலை தேடி வந்த ஆதரவற்ற பூனை. இவர் கொடுத்த உணவுக்கும் அன்புக்கும் கட்டுப்பட்டு…