சாதிப்பெயரை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமா? – முனைவர் ஆரோக்கியராஜ், தென்கொரியா
தமிழ்நாட்டில் இனி பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதிப்பெயர் குறிப்பிடப்படாது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இது இப்போதுதான் தோன்றிய சிந்தனை என்பதுஅல்ல. இந்தியாவில் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருந்த தலைவர் கலைஞர் 1973 ஜூலை 2 ஆம் தேதி பிறப்பித்த அரசு ஆணைதான் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆம், அன்றைக்கே, பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளின் சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட பெற்றோர் விரும்பாவிட்டால் கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் கலைஞர். ஆனால், படிப்படியாக சாதிகளின் தாக்கம் குறைந்து வந்த…