யார் இந்தப் பொன்னியின் செல்வன்கள்? – Marx Anthonisamy
’பொன்னியின் செல்வன்’ நாவல் மற்றும் அந்தத் தொடர் நாவலை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி பற்றி அந்தப் பெயரில் திரைப்படம் தயாரிப்பவர்கள், அதற்கு வசனம் எழுதியுள்ள ஜெயமோகன் வரை ஆய் ஊய்ன்னு அடிக்கிற லூட்டி தாங்க முடியவில்லை. இன்று என்னிடம் ஒருவர், “சார்! இந்த ராஜ ராஜ சோழன்தான் அந்தக் காலத்துல நாகப்பட்டுணத்துல சூடாமணி விகாரைன்னு புத்தருக்கு கோயில் கட்டிக் கொடுத்தாராமே…” எனப் படு சீரியசாகக் கேட்டார். ஏதோ ராஜராஜ சோழன் பௌத்தத்தை எல்லாம் ஆதரித்தவன் போலவும், மத…