Browsing: நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள்

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

பெண்களின் ஆரோக்கியத்துக்கு…(தொடர்ச்சி) இது ஆறாவது வழி. மனம் விட்டு சிரிப்பதாலும் உடற்பயிற்சிகள் செய்வதாலும் விளையும் பலன்கள் ஒரே மாதிரியானவை என்று சொன்னால் வியப்பாக இருக்கிறது அல்லவா? கைகளை ஆட்டி உடல் குலுங்கக் குலுங்கச் சிரியுங்கள். மனம் விட்டு சிரிப்பதால் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கலோரிகள் கரைகின்றன. இயற்கையான வலி நிவாரணிகளை செயல்படத் தொடங்குகின்றன. மன அழுத்தத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. வயிறு குலுங்க சிரிப்பது, உங்கள் வேலையில் திருப்தியை ஏற்படுத்தும். சுயமதிப்பில் திருப்தியை…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

பெண்களின் ஆரோக்கியத்துக்கு…(தொடர்ச்சி) இது முதல் வழி. பொதுவாக பெண்கள் பிறரைச் சார்ந்தே இருக்கிறார்கள். பிறருடைய தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். உங்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்று நினையுங்கள். உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள். அது உங்களு டைய ஆரோக்கிய உணர்வுகளை மேம்படுத்தும். அந்த உணர்வு கள் உங்களைச் சுறுசுறுப்பானவராக மாற்றும். தோற்றத்தை அழகாக்கும். சரி, உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள் என்றால் என்ன அர்த்தம்? உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம். உதாரணமாக படிப்பதைத் தேர்ந்தெடுங்கள். ஏதேனும்…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

பெண்களின் ஆரோக்கியத்துக்கு… அந்தப் பெண்ணின் கண்களைப் பாருங்கள். அது எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. உடலமைப்பைப் பாருங்கள். அது எவ்வளவு சிக்கென்று பளபளப்பாக இருக்கிறது. அவருடைய முகத்தைப் பாருங்கள். அது தன்னம்பிக்கையில் மிளிர்கிறது. இந்த உலகமே தன்னுடையது போல, அவளால் மட்டும் எப்படி இருக்க முடிகிறது? நீங்கள் நேர்மையானவரா? அப்படியானால், யாரேனும் ஒரு பெண்ணைப் பார்த்து இப்படி நீங்கள் நினைத்திருப்பீர்கள். அவளுடைய அழகையும் சுறுசுறுப்பையும் பார்த்து வியந்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று வியந்திருப்பீர்கள். அதிர்ஷ்டமா?…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 20 – ஆதனூர் சோழன்

கொழுப்பை கரைக்க 20 நிமிட பயிற்சி நாம் நிறைய சாப்பிடுவோம். ஆனால், அவை நன்றாக செரிப்பதற்காக என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க மாட்டோம். சாப்பிடுகிறோம். தூங்குகிறோம். அல்லது, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறோம். உடல் உழைப்பு அதிகம் இல்லாவிட்டால் நமது உணவில் உள்ள கலோரிகள் கொழுப்பாக சேர்ந்து பலவிதமான தொந்தரவுகளுக்கு காரணமாக அமைகிறது. நமது உணவில் உள்ள கலோரிகள் சிறப்பான முறையில் செரித்தால்தான், உடலுக்கு சக்தி கிடைத்து ஆரோக்கிய மாக இருக்க முடியும். இதற்காக…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 19 – ஆதனூர் சோழன்

உடல் உறுதிக்கு எளிய பயிற்சிகள் சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்பது மூதாதையர் வாக்கு. அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும் மனிதன் எதிர்கொண்டுவருகிறான். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தைரியமாக எதிர்கொள்வதற்கு ஆரோக்கியமான உடல் இருக்க வேண்டியது அவசியம். இந்த ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கான வழிவகைகளைத் தெரியாமல் நாள்தோறும் குழம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு உடற்பயிற்சியே சரியான வழி என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். தலை முதல் பாதம் வரை உடலின் ஒவ்வொரு பாகங்களையும் ஊக்குவிப்பதற்கான…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 18 – ஆதனூர் சோழன்

நீண்டநாள் வாழ…. மருத்துவ வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியவில்லையே தவிர, மரணத்தை தள்ளிப் போட முடிகிறது. பழுதடைந்த உடல் உறுப்புகளை, எந்திரத்துக்கு உதிரி பாகங்களை மாற்றுவதைப் போல, புதிய உறுப்புகளை மாற்ற முடிகிறது. ஆண் பெண் சேர்க்கையின்றி ஆய்வுக்கூடத்திலேயே உயிரைப் படைக்க முடிகிறது. அல்லது உருவாக்க முடிகிறது. மனிதனின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. அதிலும், ஜப்பானில் 100 வயதைத் தாண்டியும் நிறைய பேர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். உறுப்புகள் பழுதடைந்து நீண்ட நாள் வாழ்ந்து என்ன…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 17 – ஆதனூர் சோழன்

மூளையை புத்துணர்வாக வைத்திருக்க… இந்த நூற்றாண்டு இயந்திரகதியான வாழ்க்கையை அறிமுகம் செய்துவிட்டது. எல்லாவற்றுக்கும் இணைய தளங்களை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். அன்றாட வாழ்க்கையில் சிந்திக்கும் ஆற்றலும் நினைவாற்றலும் குறைந்துவிடுகிறது. இதற்கு மூளைக்கு புத்துணர்வூட்ட தவறுவதுதான் இதற்கு காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க நாள்தோறும் செய்ய வேண்டிய பயிற்சிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வழிமுறைகள் நமது மூளை சோர்வடைந்து விடாமல்…

1 2 3 4