Browsing: பாமினி ராஜேஸ்வரமுதலியார்

சிந்தனைக் களம் 14 – Bamini Rajeswaramudaliyar

தமது தவறுகளை, நம்பிப் பழகும் மனிதர்களுக்கு செய்யும் துரோகங்களை உணராமல், தாம் கூறிய பொய்களை உண்மையாக்க தொடர்ந்து பல பொய்களை பேசுபவர்களை கண்டு மன வேதனை அடைகிறேன். ஒருவரின் பெயரைக் கெடுப்பதால், அன்பான உறவுகளுக்குள் சந்தேகங்களை உருவாக்கி பிரித்து, பக்கம் பலம் சேர்ப்பதால், துரோகங்களும், பொய்களும் உண்மையாகி விட முடியாது. “தன்வினை தன்னைச் சுடும்” மறவாதீர்! நான் இப்படியான மனிதர்களை பார்த்து வேதனைப்படுகிறேன். தனக்குத் தானே ஏன் துரோகங்களை செய்கிறார்கள். இந்தப் பாவங்கள் அவர்களையும், அவர்களின் பிள்ளைகளையும்,…

சிந்தனைக் களம் 11 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

தகுதியான இடத்தில் இருந்து கொண்டு களவெடுத்தால் உலகத்திற்கு கள்ளனும் நல்லவன்தான். அதுவும் பொய் பேசியவன் வீட்டில் களவு போனால் அதுவும் உலகுக்கு பொய்யான செய்திதான். இதில் உண்மையை காண விளைபவர்கள் எத்தனை பேர். பொய் பேசுவது தவறு. அதற்காக நடந்த அநீதி எப்படி பொய்யாகும். தவறு செய்பவர்கள் இப்படியாக மற்றவர்களால் நம்பப்படாத மனிதர்களிடம் அல்லது இளம் சமுதாயத்திடம் அதிகம் தமது சேட்டையை காட்டுகிறார்கள். இதனால்தான் பலவிதமான Abuses, பொய்கள், துரோகங்கள் பிடிபடாமல் வருடக்கணக்காக தொடர்கிறது. பட்டங்களே(label) உண்மையையும்…

சிந்தனைக் களம் 10 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

அவன் ஆம்பிளப்பிள்ளை,நீ பொம்பிளைப் பிள்ளை விட்டுக்கொடு என்ற வார்த்தையுடன் ஆம்பிளைப் பிள்ளைகளின் எண்ணத்தில் தாய்/தந்தையர் பெண்ணைப் பற்றி அவள் குறைந்தவள் என்ற தவறான சிந்தனையை விதைத்து விடுகிறார்கள் அவர்களை அறியாமலே. இது பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஊட்டி சுயமரியாதையை இழக்க வைக்க, ஆணுக்கு ஆணவத்தை ஊட்டிவிடுகிறது. இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தாத தன்மை கொண்டது. இதுவே பல பிரச்சனைகளுக்கான ஆரம்ப அடியாகும். ஆண்கள் கணவர் என்ற பட்டத்தினை பெற்றதும் ஆணவத்தை காட்டுவதும், தன்நம்பிக்கை குறைந்த பெண் கோபப்படுவதும்…

சிந்தனைக் களம் – 9 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

கல்வியில் சிறந்து, நல்ல தொழில் புரிந்து எவ்வளவு முன்னேறி இருந்தாலும் பெண்கள் காதல் என வந்துவிட்டால் அறிவை தொலைத்து (insecure person) உணர்வால் பலயீனமானவர்களாக மாறிவிடுகிறார்கள். (அனைவரும் அல்லர்). இது நல்லதல்ல. சிந்திக்கவும். நல்ல ஆண்கள் தைரியமுள்ள பண்பான பெண்களையே மதித்து காதலித்து திருமணம் செய்கிறார்கள். நல்ல துணை அமைய காலம் எடுத்தாலும் பொறுமையுடன் இருந்து மனிதர்களை உணர்ந்து அறிந்து சரியான முடிவை எடுப்பவர்கள் தன் பெறுமதியை அறிந்தவர்களாவர். சுயநலமான ஆண்களும் abusive குணமுள்ள ஆண்களும் insecure…

சிந்தனைக் களம் – 8 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

என் முகமும் நானும் இன்று 3.30 ற்கு town இல் எனது nail Appointmentஐ மகள் book பண்ணி இருந்தார். மகள் வீட்டில் பேத்தியுடன் விளையாடி மதிய உணவு உண்டு relaxed ஆக இருந்து வெளிக்கிட 3.10ஆகிவிட்டது. சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசர எண்ணத்தால் carஐ park பண்ணிவிட்டு 3.20 ற்கு வேகமாக நடந்தேன். அப்போது இந்திய அல்லது கறுப்பு இன இளைஞன் (இந்த நாட்களில் யாரைப்பார்த்தாலும் ஒரே மாதிரியாக தெரிகிறார்கள்) என்னை நோக்கி…

சிந்தனைக் களம் – 7 – பாமினி ராஜஸ்வரமுதலியார்

தனது சரி பிழைகளை உணராதவர்கள் தன்நிலை அறிவதில்லை. மற்றவர்கள் மேல் குற்றம் சாட்ட முன்பு தன்னைத்தான் திரும்பிப் பார்ப்பது அவசியம். தன் பிழைகளை மறைக்க அடுத்தவரை அவமானப்படுத்தி, மற்றவர் கவனத்தை திசை திருப்புவதால் செய்த தவறு இல்லாமல் போய்விடுமா? எனது பதிவுகள் மனச்சாட்சியை தட்டி எழுப்பவும், சிந்திக்க வைக்கவும் எழுதுகிறேனே அன்றி குறை குற்றம் கூற அல்ல. திருந்துவதற்கு முதலாவது படி உணர்தலாகும். தவறுகளை செய்யாத மனிதர்கள் இப்பூமியில் இல்லை. அதுவே மனிதர்களை பதப்படுத்தி பண்படுத்துகிறது. அதனால்…

சிந்தனைக் களம் – 6 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

தான் பேசும் வார்த்தைகளை தன் காதுகள் செவிமடுக்க, மூளை கிரகிக்க, இதயம் அதன் தன்மையை உணர ஆரம்பிக்கும் போது மனிதன் தன்னைத்தான் உணர்ந்து, மனிதன் மனிதனாக முமுமையடைய ஆரம்பிக்கிறான். அங்கேதான் நான் நேர்மையான மனிதன் என்ன அழகான உணர்வு ஆரம்பமாகிறது. அது பல உன்னதமான பயணத்திற்கு வழிகாட்டியாக மாறுகிறது. நேர்மை உண்மையுடன் புத்திசாலித்தனம் வேண்டும். அல்லது ஏமாற்றங்களும் வலிகளுமே மீதமாகும். என்னால் கஷ்டப்பட முடியாது அதனால் நேர்மையாக வாழ முடியாது என்பதை விட, உங்கள் உலக அறிவை(…