Browsing: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பள்ளிக் கல்விக்கு கொள்ளி வைக்காதீர் – ஆதனூர் சோழன்

எம்ஜியாரும், ஜெயலலிதாவும்தான் ஆசிரியர் அரசு ஊழியர்களை படுமோசமாக கேவலப்படுத்தியவர்கள். அவர்கள் வழியில் தினமலர் பத்திரிகையும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. அவாள் மட்டுமே ஆசிரியர்களாக இருந்து, யாரெல்லாம் படிக்கனும்னு வரையறை வகுத்திருந்த நிலை பறிபோனதும், அவாள் யாரும் ஆசிரியர் பணிக்கு வருவதே இல்லை. இருப்பதிலேயே கடினமான பணி ஆசிரியர் பணிதான் என்பது எனது கருத்து. வீட்டில் ஒரு குழந்தையை கட்டுப்படுத்தி சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும் நிலையில் காலையிலிருந்து மாலைவரை பிள்ளைகளை பாதுகாத்து,…

அன்பில் மகேஷுக்கு எதிராக அதிகாரிகளின் சதிவலை – ஆதனூர் சோழன்

அமைச்சரான புதிதில் கல்வித்துறையில் நிறைய மாற்றங்களை செய்யும் ஆர்வத்தில் அன்பில் மகேஷ் செயல்பட்டார். ஆனால், அவருடைய ஆர்வம் நீர்த்துப்போகும் வகையில், அதாவது சொந்தமாக எதையும் யோசிக்காத வகையில் முட்டுக்கட்டை போட்டது முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் என்று தொடக்கத்திலேயே பேசிக் கொண்டார்கள். கல்வித்துறை அதிகாரிகளின் இந்த கருத்தை முதன்முதலில் வெளியிட்டது உதயமுகம்தான். கல்வித்துறை அதிகாரிகளை அமைச்சர் நேரடியாக கலந்து ஆலோசிக்கக்கூட அவரால் முடியவில்லை என்பதுதான் உண்மை. கல்வித்துறை இயக்குனர்கள் அமைச்சரைச் சந்தித்து ஆலோசித்த காலம் மலையேறிவிட்டது. இயக்குனர்களின்…

சவடால் சவுக்கு சங்கருக்கு ஒரு சவால் – ஆதனூர் சோழன்

இவரு ஊதுறதும், அவரு ஆடுறதும் என்று ஒரு முதலமைச்சரையும், சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரையும் கேவலமாக சித்தரிக்கிற சவுக்கு சங்கரின் வீடியோ ஒன்றைப் பார்த்தேன்… திருமாவின் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் பேசிய உணர்ச்சிகரமான பேச்சை கொச்சைப் படுத்தும் விதமாக சவுக்கு சங்கர் பேசினார். சத்யம் டி.வி. முக்தாரிடம் வாங்குப்பட்ட பிறகு, தன்னை டீமாரலைஸ் பண்ணப் பார்ப்பதாக புலம்புகிறார். கலைஞரின் குடும்பத்தினர் மீது புழுதிவாரி இறைப்பதை துணிச்சலாக கருத்தும் பத்திரிகையாளர்கள், சீமானைக்கூட சீண்டிப்…

அகவிலைப்படி உயர்வு அறிவித்த முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி!

தமிழ்நாடு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவிப்பதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது… நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பின் தனது எழுச்சியுரையில் தனது ஆட்சியின் அச்சாணியாக விளங்கும் அரசு…

நூலக இதழ் தேர்வை ரத்து செய்வாரா முதல்வர்? குமுறல்கள் கோட்டையை எட்டுமா?

எல்லோருக்குமான அரசு. வாக்களிக்காதோரும் பாராட்டும் வகையிலான அரசு என்பதுதான் தனது இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்திருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தனது அரசு வெளிப்படையாக செயல்படும். எதையும் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கும் என்றெல்லாம் பறைசாற்றினார். ஆனால், நூலகத்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி குறித்து பத்திரிகையாளர்களும், பதிப்பாளர்களும் மிகப்பெரிய குரல் எழுப்பி வருகிறார்கள். அதுகுறித்து அரசுத் தரப்பில் எந்தவொரு விளக்கமும் இதுவரை இல்லை. 300க்கு மேற்பட்ட குப்பைப் பத்திரிகைகளை ஒழித்துக் கட்டியிருப்பதாக ஒரு குப்பை பத்திரிகையாளர் விளக்கம்…

நதிபோல் ஓடும் முதல்வர் ஸ்டாலின்! – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

மருத்துவ கல்லூரிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத இடங்களை மோடி அரசு 4 ஆண்டுகளாக விழுங்கிக் கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்தவுடன் அந்த இட ஒதுக்கீடை மீண்டும் மாநிலத்திற்கு பெற்றுத்தர சட்டப்போராட்டம் நடத்தியது. மாநில உரிமையை பெற்றுக் கொடுத்ததுடன் எல்லா மாநிலங்களுக்கும் அந்த உரிமையை பெற்றுக் கொடுத்தது. சரி, அது கிடக்கட்டும்… எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அடிமை அரசு, மருத்துவ உயர்படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை மோடி அரசு பிடுங்கியபோது எதிர்ப்பே இல்லாமல் விட்டுக்கொடுத்தது.…