Browsing: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை – அரசு அறிவிப்பு

உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில்…

16 அடி பாயும் குட்டிப்புலி ஸ்டாலின் – ஆதனூர் சோழன்

எழுதத் தெரியாவிட்டால் என்ன? தூய தமிழில் பேசத்தெரியாவிட்டால் என்ன? சிலருடைய நடவடிக்கைகளே இலக்கியத் தரம் மிக்கவையாக இருக்கும். அதிலும் அந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டோரின் நலன் சார்ந்ததாக, ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக, ஒரு நாகரிகத்தின் தொன்மையை பாதுகாப்பதாக, ஒரு மொழியின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்தால் அது எத்தனையோ இலக்கிய படைப்புக்கான கருக்களை வாரி வழங்கும். அந்த வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இலக்கியப் படைப்புகளுக்கு கருக்களை வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்.…

“முடிந்தால் தமிழக சட்டமன்றத்தை ” முடக்கிப் பாருங்கள்” – எடப்பாடிக்கு உதயநிதி சவால்!

மதுரை மாநகராட்சி, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், வெற்று வாக்குறுதி கொடுத்து காணாமல் போன அடிமைகளுக்கு பாடம் புகட்டிட வேண்டும்மென்றும், மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்றும், மேலும் தென்மாவட்ட மாணவர்களின் கல்விக்கு பேருதவியாக மதுரையில்…

புதுவரவுகளுக்கு தங்கக்கிரீடம்… தியாகிகளுக்கு முள்கிரீடமா? திமுகவில் குமுறல்!

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விளைந்த காட்டுக் குருவிகளாக பிற கட்சிகளில் இருந்து கொள்ளையடித்த பணமூட்டையுடன் திமுகவுக்கு படையெடுப்பார்கள். ஆட்சிக்கு வரும்வரை தனது வியர்வையையும், பணத்தையும் செலவழித்து ஆட்சிக்கு வரும்வரை தலைமையின் கட்டளைகளை தலையில் சுமந்து, தனது குடும்பத்தைப் பற்றியே கவலை இல்லாமல் உழைப்பவர்கள் பின்னுக்கு தள்ளப்படுவார்கள். இவர் இன்ன கோஷ்டி என்று பாகுபாடு பார்ப்பதும் மாவட்ட அளவில், மாநில அளவில் உருவெடுக்கும். ஆனால், அந்தக் கோஷ்டிகளும் இணைந்தே திமுக என்பதையும், அந்தக் கோஷ்டிகள் அனைத்தும் தலைவர் தளபதிக்கு…

திமுக அரசு ஏன் பொங்கலுக்கு பணம் தரவில்லை? – Muralidharan Pb

போன வருடம் அதிமுக அரசை கொடுக்க சொன்னாரே எதிர்கட்சி தலைவராக இருந்த இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின்? இப்ப பணம் பற்றிய பேச்சே இல்லை என முட்டாள்தனமாக கேள்வி எழுப்புகின்ற சங்கி, அதிமுக, செருப்பு உள்ளிட்ட அரை மண்டைகளுக்கு… திமுக தலைவர் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த போது முதல்வராக இருந்த பழனிச்சாமிக்கு வைத்து கோரிக்கையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்க. தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக அதாவது 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முழு ஊரடங்கு…

திமுக ஒன்றியச் செயலாளர்களால் ஊராட்சித் தலைவர்கள் அனுபவிக்கும் தொல்லைகள்!

ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை திமுக ஒன்றியச் செயலாளர்கள் பறித்துக் கொள்வதாகவும், உரிய நேரத்தில் அந்த வேலைகள் நடைபெறுவதில்லை என்றும் புலம்பல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. ஊராட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், அந்தந்த ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் வளர்ச்சிப் பணிகளை செய்வதற்கு வார்டு மெம்பர்களுக்கும், துணைத்தலைவருக்கும் பங்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்கெனவே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக ஊராட்சித் தலைவராக இருந்தாலும், வார்டு மெம்பர்களாக இருக்கும் திமுக ஆட்களே முட்டுக்கட்டை…

காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் கோரிக்கை நிறைவேறுகிறது!

செங்கல்பட்டு அருகே உள்ள திருமணி ஊராட்சியில் அமைந்துள்ள H.L.L.பயோ டெக் தடுப்பூசி மையத்தை புனரமைக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம் கடந்த 2019 நவம்பர் மாதத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷவர்தனை நேரில் சந்தித்து #HLL_Biotech_Limited தடுப்பூசி நிறுவனத்தில் மருத்துவ தயாரிப்புகளை தொடர வலியுறுத்தினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் நேரில் சந்தித்து மேற்படி #HLL_Biotech_Limited தடுப்பூசி நிறுவனம் தொடர்ந்து செயல்பட நிதியினை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்திருந்தார்,…