Browsing: முஹம்மது ரஃபி

இன்னிசை ராணி – அப்துல்கையூம்

ஒரு காலத்தில் இந்தப் பெண்மணியின் இனிமையான குரல் ஒலிக்காத இஸ்லாமியர்களின் வீடே கிடையாது என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம். இவரது பாடல்கள் எல்லோருடைய உதடுகளையும் முணுமுணுக்க வைத்தது. இதமான குரல். இனிமையான சாரீரம். பண்ணிசையில் இலகுவான ஏற்ற இறக்கம். கண்ணை மூடிக் கொண்டு கேட்டாலும் இது கே.ராணி உடைய குரல் என்று எளிதில் கண்டுபிடித்துச் சொல்லி விடலாம். நாகூர் இசைமுரசு இ.எம்.ஹனிபாவுடன் இப்பெண்மணி இணைந்து பாடிய பாடல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அத்தனையும் முத்துக்கள். அன்றைய கால கட்டத்தில்…