Browsing: மோடி

பாஜக மாதிரியா திமுக? – Ravishankar Ayyakkannu

யாரோ ஒரு BJP ஆசாமி பேட்டி கொடுத்த நினைவு. “மோடி வெற்றி பெற்றால் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம் என்றீர்களே! அது என்ன ஆச்சு?” என்று நிருபர் கேட்கிறார். “நாங்கள் எங்கு ஆட்சிக்கு வரப் போகிறோம் என்று நினைத்து இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசினோம். அய்யோ பாவம், நீங்கள் அதை எல்லாம் நம்பிவிட்டீர்கள். பிம்பிலிக்கி பிலாப்பி” என்று பாஜக ஆசாமி கூலாகப் பதில் சொன்னார். “சொன்னதைச் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம்” என்பது திமுகவின் தாரக…

‘நான் பில்கிஸ் பானு பேசுகிறேன்’ – தோழர் க.கனகராஜ்

எனதருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம். அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில் கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும்,…

அடங்காத காளை ஒன்னு அடிமாடா போனதடி – ஆதனூர் சோழன்

என்னை கஷ்டங்களில் இருந்து மீட்டவர் இளையராஜா. என்னை தாலாட்டி தூங்க வைத்தவர் இளையராஜா. என் காதலின் துணை அவர்… என் இரவுகளின் கனவு அவர்… என்று, பலவாறாக இளையராஜாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோர், உலகின் பல பகுதிகளில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளையராஜாவை மத்திய பாஜக அரசாங்கம் மாநிலங்களவையில் உறுப்பினராக்கி அறிவித்துள்ளது. அவருக்கு ஒன்றிய அரசின் எந்த பதவியைக் கொடுத்தாலும் அதற்கு அவர் தகுதியானவர்தான். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால், இந்த பதவியை அவருக்கு கொடுப்பதற்கு…

இந்திய ஏரிக்கு குறுக்கே பாலம் கட்டும் சீனா – பிரதமர் மோடி என்ன சொல்லப் போகிறார்?

இந்திய பகுதியான லடாக்கில் உள்ள பாங்காங் திசோ ஏரியின் குறுக்கே சீனா புதிய பாலம் ஒன்றை கட்டி வருகிறது. இந்த பாலத்தின் மூலம் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு சீனா தனது படைகளை விரைவாக கொண்டு வந்து சேர்க்க முடியும். இந்தியா, சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் டெப்சாங் சமவெளியில் இருந்து வடக்கேயும், தெற்கே டெம்சோக் பகுதியிலும் இரு தரப்பிலும்…

ஆர்எஸ்எஸ் எதற்காக உருவாக்கப்பட்டது? – Vinayaga Murugan

மதியம் பொழுதுபோகாமல் ‘ஹேராம்’ படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனையோமுறை பார்த்திருந்தாலும் இந்தமுறை பார்க்கும்போது இதுவரை தவறவிட்ட ஒரு விஷயம் புரிந்தது. கதைப்படி கமலஹாசனும், ஷாருக்கானும் தொல்லியல் துறையில் பணிபுரிபவர்கள். படத்தின் முதல்காட்சியே அவர்கள் இருவரும் ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்வதாக தொடங்கும். பிறகு ஒரு வசனம் வரும். ஷாருக்கான் சொல்வார்… “ஐயாயிரம் வருஷம் முன்னாடி வாழ்ந்த சிவிலைசேஷன். பசங்க பொம்மை வச்சு விளையாடணும்ன்னு நினைச்ச சிவிலைசேஷன். நம்மளை மாதிரி பெரியவங்க சாமியை வச்சு விளையாடணும்ன்னு நினைக்காத…

தமிழகம் வட மாநிலத்தவரின் வேட்டைக்காடாக வேண்டுமா? ஒரே ஒரு உதாரணம்!

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்.. அதிகமாக அல்ல..! முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்.. உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே…. அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு… எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்.. எனத்தெரியவில்லை..! மேலே சொன்னது அனைத்தும் உண்மை… *மீண்டும் அதிமுக…

தலித் வாக்காளர்களை குறைக்க எல்லையை விட்டுக்கொடுக்கும் ஆதனூர் ஊராட்சி!

பக்கத்து நாடுகளுடன் பிரச்சனையை சுமுகமா தீர்க்க மனசில்லாம எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு, ராணுவத்துக்கு செலவு செஞ்சுக்கிட்டு இருக்கு இந்தியா. பாகிஸ்தான்கிட்ட ஒரு மாதிரியும், சீனாகிட்ட ஒருமாதிரியும் இந்திய அரசு அணுகுது… அருணாச்சல பிரதேசத்திற்குள் சீனா ஆக்கிரமிப்பை கண்டுக்காம விடுது இந்திய அரசு… ஆனால், பாகிஸ்தான் கிட்ட வம்புச்சண்டை இழுக்குறதும், பாகிஸ்தானை காரணம் காட்டி ஜம்மு காஷ்மீரை கூறுபோடுறதுமா இந்திய அரசு ஏட்டிக்குப் போட்டியா நடந்துக்குது… நாடுகள் இடையே இப்படி என்றால் தேசபக்தி பொங்குது. ஆனால், நாட்டுக்குள்…