Browsing: ரஜினிகாந்த்

மகிழ்ச்சி எங்கே கிடைக்கும் தெரியுமா ரஜினி?

உலக பணக்காரர்கள் ஆயிரம் பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா. ஆனால் அவர்தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர். ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார். “உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது எது?” என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ஃபெமி கூறிய பதிலை ரஜினி படித்தால், அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கும் என்று புரியும்… “நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து…

ரஜினிகாந்த் பிறந்த நாள்- நள்ளிரவில் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் 71–வது பிறந்தநாளை ஒட்டி அவரது ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதனால், டுவிட்டரில் #HappyBirthdayRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், தொலைப்பேசி வழியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்கள் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில், ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடி…

ரஜினியால் எந்தவித தாக்கமும் ஏற்படாது- கனிமொழி

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தொடங்கினார். கொங்கணாபுரம், புதுப்பாளையம், வனவாசி, இருப்பாளி ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்ட கனிமொழி, ஜலகண்டாபுரத்தில், பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, “மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்த 3 சட்டங்களும் விவசாயிகளை மட்டுமல்ல சாதாரண மக்களின் உணவுப்பாதுகாப்பையும் அழிக்கக்கூடியது. அந்த சட்டத்திற்கு ஆதரவளித்தவர் முதலமைச்சர் பழனிசாமி” என்று…