Browsing: வாழ்வின் வண்ணங்கள் – 20

வாழ்வின் வண்ணங்கள் – 20 – கை.அறிவழகன்

ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் தார் பாலைவனத்தின் நடுவே ஆண்டுதோறும் ஒரு விழாவைக் கொண்டாடுகிறார்கள். கால்கள் உறுதியாக இருந்த 2014 ஆம் ஆண்டின் ஒரு நாளில் நான் அங்கிருந்தேன், ஒரு பெரிய மேட்டின் மீதிருக்கும் கோட்டைக்கு எதிர்புறத்தில் குதிரைகள், ஒட்டகங்கள் அணிவகுத்து ராஜஸ்தானியப் பெண்கள் குடங்களில் தேங்காய்களையும், முளைப்பாரிகளையும் ஏந்தியபடி நடக்கிறார்கள். ராஜஸ்தானின் பழைய இசைக்கருவிகளை ஆங்காங்கே குழுக்களாக இசைத்தபடி அமர்ந்திருக்கிற வண்ணத் தலைப்பாகை அணிந்த இளைஞர்களையும், அழகிய ராஜஸ்தானியப் பெண்களையும் வேடிக்கை பார்த்தபடி…