Browsing: வாழ்வின் வண்ணங்கள் – 24

வாழ்வின் வண்ணங்கள் – 24 – கை.அறிவழகன்

நேற்றைய இரவு ஒரு உன்னதமான இரவு, பெங்களூரின் லே கிராண்டே விடுதியின் முகப்பில் நெடிய புல்வெளியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். குளிர் காற்று வீசும் உடலை மெல்ல ஊடுருவி நடுங்க வைக்கிற அந்த முன்னிரவில் நான்கைந்து வட இந்தியக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தென் ஆப்ரிக்க எழுத்தாளர் “மார்க் லூபர்கன்” அவர்களை இன்னும் சிறிது நேரத்தில் சந்தித்து உரையாடப் போகிறோம் என்கிற நினைவு ஒரு அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது. பெரிய அளவில் மேற்குலகால் அறியப்படாத ஊரக எழுத்தாளர் என்றாலும்…