Browsing: வாழ்வின் வண்ணங்கள் – 25

வாழ்வின் வண்ணங்கள் – 25 – கை.அறிவழகன்

பெண்களும், இலக்கியமும். எனக்கு ஒரு தோழி இருந்தாள், நானும் அவளும் மேல்நிலைக் கல்வியை ஒன்றாகப் படித்தோம். நுண்கலைகள், ஓவியம், இலக்கியம், இசை, பேச்சு என்று எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கக் கூடியவள், அவளோடு பள்ளியின் சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் நானும், பல நேரங்களில் அவளும் பரிசுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறோம். இன்னும் திறந்த மனதோடு சொல்ல வேண்டுமானால் அவளைக் கண்டு நான் அஞ்சினேன், அவளது குரல் எப்போதும் காட்டருவி ஒன்றின் கட்டுங்கடங்காத வெள்ளமாய்…