Browsing: வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள் – 26 – ராதா மனோகர்

நாம் உலகை ரசிக்க வந்த ரசிகர்கள்! ஆத்மாக்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே! நான் இப்போது தெரிவிக்க போகும் கருத்து உங்களில் அநேகருக்கு ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும் . மிகவும் பழகி போன ஒரு கோட்பாட்டை எழுந்த மானத்தில் தூக்கி எறிவது சுலபம் அல்ல. மிகவும் மெதுவாக படிப்படியாக தான் ஆழமாக பதிந்து விட்ட கோட்பாடுகளை மறு பரிசீலனை செய்ய முடியும். அடிப்படையில் எனக்கு பொறுமை இல்லை. தெரிந்ததை அல்லது நான் நம்புவதை எவ்வளவு விரைவாக வெளிப்படுத்த முடியுமோ…

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் 5 – ராதா மனோகர்

5. நிமித்தகாரியின் வேட்டைக்களம் குலதிலகனின் தூதுவர்களாக வந்த பார்ப்பனர்களிடம் புன்னகையுடன் பேசிய பாக்கியத்தம்மாள்… “சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர் களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசி விட்டு கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு கிராமங் களை நான் தருவதால் மக்களுக்கும் எனக்கும் என்ன பயன் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டாள். உடனே அவர்கள், “பேராவூர் அரசர் குலதிலகன் நிச்சயம் தகுந்த கைம்மாறு செய்வார். அது பற்றி பின்னர் மீண்டும் பேசலாம்” என்று பதிலளித்தார்கள். இதையடுத்து அவர்களை நன்றாக உபசரித்து…

வாழ்வியல் சிந்தனைகள் 2 – ராதா மனோகர்

2. இயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் (Collective Consciousness … become Collective Unconsciousness. Then it will create material realities) தனி மனிதர்களுக்கு இருக்கும் மன நிலை அவர்களை வாழ்வை தீர்மானிக்கும் என்பதை பற்றி பல தடவைகள் எழுதி உள்ளேன். அவற்றை பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டலும் அதுதான் உண்மை. பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது. இங்கே நான் சொல்ல வரும் விடயம்…

வாழ்வியல் சிந்தனைகள் 1 – ராதா மனோகர்

1. ஒரு உடல் + ஒரு உள்ளம் + ஒரு உலகம் + உயிர் = உன் இருப்பின் தொடர்ச்சி! மனித வாழ்வின் மர்மங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சியை பொதுவில் யாரும் திறந்த மனதோடு அணுகுவதில்லை. அதற்கு காரணம் அது பற்றி அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளே. அவை அவர்களின் அறிவுத்தாகத்தை தீர்த்து கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்! இந்த நம்பிக்கைதான் அறிவுக்கு மிகப்பெரும் தடை. பிறப்பு, இறப்பு, மறுபிறவி,…

வாழ்வியல் சிந்தனைகள் – ராதா மனோகர்

உங்களுடன் சில வார்த்தைகள் அழகான சிறு குருவியை நின்று நிதானமாக ரசித்திருக்கிறோமா? முதலில் உங்களுக்கு என் அன்பான வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நாம் மிகவும் ரசிக்க வேண்டியது வாழ்க்கையையே. ரசிக்க வேண்டிய வாழ்கையை நாம் கல்குலட்டர் கொண்டு கணக்கு பண்ணியே பழகி விட்டோம். கொஞ்சம் பொறுமையாக இருந்து யோசித்தால் தெரியவரும். நாம் அநேகமான சந்தர்ப்பங்களில் முத்துக்களை நீக்கி கற்களை பொறுக்கிய முட்டாள்களாகவே வாழ்ந்திருப்பது. அழகான சிறு குருவியை நின்று நிதானமாக ரசித்திருக்கிரோமா? ஓட்டமே வாழ்க்கையாக எண்ணிக்கொன்டல்லவா இது…