Browsing: விந்தன் சி’றுகதைகள் 13‘

விந்தன் சிறுகதைகள் – 13

பத்தினித் தெய்வம் துணியை துவைத்துப் பிழிந்து தோளில் போட்டுக் கொண்டாள்; குளித்து முழுகிக் கூந்தலை விரித்து விட்டுக் கொண்டாள்; குடத்தில் நீரை நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டாள்; குனிந்த தலை நிமிராமல் குளத்தங் கரையிலிருந்து வந்து கொண்டிருந்தாள். குடும்பப் பெண்; குறுகுறுப்பான பார்வை; கண்ணிமைகள் கொட்டும்போது யாரையோ ‘வா, வா’ என்றழைப்பது போலிருந்தது. நகை முகம்; குழி விழுந்த கன்னங்கள்; நடக்கும் கைவீச்சில் ஒரு கவர்ச்சி; நடையிலே ஒரு சிருங்காரம்; நடுநடுவே தண்ணீர் ‘தொளக், தொளக்‘ என்று…