Browsing: விந்தன் சிறுகதைகள் – 27

விந்தன் சிறுகதைகள் – 27

கருவேப்பிலைக்காரி வழக்கம்போல் இன்றும் விடியற்காலை ஐந்து மணிக்குப் படுக்கையைவிட்டு எழுந்தேன். மணி பத்தாகும் வரை ‘அவ’ருக்கு வேலை செய்வதற்கே பொழுது சரியாயிருந்தது. மாதம் பிறந்தால் அந்த இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரன் அவருக்குத் தொண்ணூற்றைந்து ரூபாய் ‘பிச்சைக்காசு கொடுத்தாலும் கொடுத்து விடுகிறான். அவர் மட்டுமா அவனுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது? நானும்தான் அவர் மூலம் அவனுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது! மணி பத்துக்கு மேல் ஒரு நிமிஷம் ஆகிவிட்டால் போதும், அவர் தவியாய்த் தவித்துக் குதியாய்க் குதிப்பார்! அவர் குதிப்பதைப் பார்த்துக்கொண்டு நான்…