Browsing: விந்தன் சிறுகதைகள்

விந்தன் சிறுகதைகள் – 3

வாழப் பிறந்தவன் “ஏ, குழந்தே!” என்று இரைந்தான் இருளப்பன். “என்னப்பா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் கேதாரி. “ரொம்ப நாளா உன்னை ஒண்ணு கேக்கணும் கேக்கணும்னு எனக்கு எண்ணம்…” “கேளேன்!” ‘’உன்னைப் பத்தி ஊரிலே நாலு பேரு நாலு விதமாப் பேசிக்கிட்டு இருக்காங்களே அதெல்லாம் நெசந்தானா?” “என்ன பேசிக்கிட்டு இருக்காங்க?” “ஊரிலே இருக்கிற பயல்களை யெல்லாம் நீ பார்க்கிறயாம், பார்த்துச் சிரிக்கிறயாம், கூடிப் பேசறியாம் – இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்களேம்மா, இதெல்லாம் நெசமான்னு கேக்கறேன்?’’ கேதாரி‘களுக்‘கென்று சிரித்தாள்.…

விந்தன் சிறுகதைகள் – 2

பொன்னையா ‘என்னா சின்னி! வயிற்றைக் கிள்ளுகிறது; சோத்தையாச்சும் வடிச்சயா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் பசியால் வாடிய பொன்னையா. “நீயும் கேட்கிறயே! வெட்ட வெளியிலே அடுப்பைப் பற்ற வச்சிட்டு நான் அவதிப்படறேன். குழந்தை வேறே பனியிலே படுத்துக் காலையிலேருந்து காயலாக் கிடக்குது. எனக்கு வேலையே ஒண்ணும் ஓடலே. அடிக்கிற காத்துலே இந்த அடுப்பு கொஞ்சமாச்சும் எரியுதா?” என்று எரிந்து விழுந்தான் சின்னி. “என்னை என்ன பண்ணச் சொல்றே. சின்னி? என் அப்பன் எனக்கு ஆஸ்தியா வச்சுட்டுப்போன அந்த…

தந்தை பெரியார் அறிவுச்சுவடி – எழுத்தாளர் விந்தன் தயாரித்தது

எழுத்தாளர் விந்தன் தயாரித்த தந்தை பெரியார் அறிவுச்சுவடி பிடிஎப் வடிவில்… சுவாரசியமானது… சுருக்கமானது… குழந்தைகளுக்கும் புரியும் வகையில் அறிவூட்டுவது… periyararivuchchuvadi